What’s your rashee? (2009)

ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not?

WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும் தனது நீண்ட நெடிய படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பவர் இந்த மூன்றரை மணி நேர திரைப்படத்தின் வாயிலாக அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும், தியேட்டரின் பாப்கார்ன் வசூலையும் ஒருங்கே அதிகரித்துச் சென்றிருக்கிறார்.

இளைய மகனுக்கு திருமணம் செய்யும் நாளில் லக்‌ஷ்மி கடாட்சம் பெருகி குடும்ப கடன் தீரும் என்ற குடும்ப ஜோசியரின் அருள்வாக்கை நம்பி அமெரிக்காவின் இருக்கும் இளைய மகனை இந்தியா வருவிக்கிறார் தந்தை. இளைய மகன் இருபதே நாளில் திருமணம் செய்ய எண்ணி ராசிக்கு ஒன்றாக 12 பெண்களைப்பார்க்கிறான். அவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறான். கடன் தீர்ந்த்தா என்பது கதை?

சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இதனை எப்போது வீட்டிற்குப்போவோமோ என்று தியேட்டரில் எல்லோரும் எண்ணும் அளவிற்கு மெல்லிய ஜவ்வாக இழுத்திருக்கும் டைரக்டரையும் எடிட்டரையும் கட்டிப்போட்டு நாள் முழுதும் உன்னைப்போல் ஒருவன் பார்க்க வைக்க வேண்டும்.

ஹர்மன் பவேஜாவை சத்தியமாக இந்த திரைப்பட்த்தின் ஹீரோ ஆக்கி இருக்கவே கூடாது. 12 வேடங்களில் நடித்து கின்னஸில் இடம் பிடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரளவிற்கு சிறந்த பெர்மான்ஸ் மட்டுமே ஆறுதல். அதுவும் 3-4 கதாபாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒரு மியூசிகலாக சிறந்த பாடல்களாவது இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. இப்படி 13 பாடல்களைப்போட்டு தேவதாஸ் ஹரிதாஸ் வரிசையில் தனது படத்தை இணைக்க நினைத்தவர் ARR ஏன் விட்டார் என்றும் தெரியவில்லை.

ஆக தத்தமது ராசிக்கு நேரம் சரியில்லாத அனைவருமே what’s your raashee பார்க்கலாம். அவ்வளவுதான்.

Very very unexpected attempt from ashutosh. Better luck next time sir.

KAMINEY(2009)

உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக் காமெடி தோய்த்த ஒரு ஆக்‌ஷன் திரில்லர் பார்க்க ஆசைப்பட்டீர்களாயின் கண்டிப்பாக கமீனே உங்களுக்கான திரைப்படம்தான். 

kaminey-2009-2b

கமீனே என்ற சொல்லை rascals / scoundrels என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம். குட்டு(guddu), சார்லி என்ற இரட்டையர்கள்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள். குட்டுவுக்கு பேசும்போது வாய் திக்கும். சார்லிக்கு பேச்சு நன்றாக வரும் என்றாலும் s என்ற உச்சரிக்கும் இடத்திலிலெல்லாம் f என்று உச்சரிப்பான்.(கேஸே என்பதற்கு ஃபேஸே, சலே என்பதற்கு ஃபலே). சார்லி குதிரை சூதாட்டங்கள் நடத்தும் ஒரு சிறு மாஃபியா குழுவில் ஆக்டிவ் உறுப்பினன். குட்டு ஒரு NGO நிறுவனத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரகன். ஆயினும் இருவரும் பல வருடங்களாய் பேச்சு வார்த்தையின்றி, மூன்று வருடங்களாய் சந்தித்தேயிராமல் வாழ்ந்து வருபவர்கள். ஒரு மழைநாள் இரவில் அவர்கள் வாழ்வில் நடைபெறும் தனித்தனி சம்பவங்கள் அவர்களை சந்திக்கவைக்கின்றன. அந்த முழுநாளில் என்ன நிகழ்ந்த்து என்பதுதான் முழுத்திரைக்கதையுமே. 

இந்த நான் – லீனியர் திரைக்கதைதான் திரைப்பட்த்தின் முழுபலமும். முதல் 15 நிமிடங்களுக்கு என்ன நிகழ்கிறது என்று தெரியாமலேயே பாதி இருட்டும் பாதி கேமரா ஆட்டமுமாய் ஒவ்வொரு கதாபாத்திரமும் வந்துபோகின்றன. ஆனால் முன்னேயும் பின்னேயுமாய் நகரும் காட்சிகளைப்புரிந்து கொண்டபின் சுவாரசியம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

’ஜப்வீமெட்’ திரைப்படத்தில் ஆபிசர் தோற்றத்தில் வந்த அதே ஷாகித் kaதான் இந்த இரட்டையர்கள் வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்தப்பையனுக்கு இவ்வளவு நடிக்க வருமா என அசரடித்திருக்கிறார்.  மராத்தியப்பெண்ணாக வரும் ப்ரியங்காசோப்ராவும் ஷாஹித்,பிரியங்கா இடையே கிளர்ந்தோடும் அன்னியோன்னியமான காட்சிகள் அடுத்த ஆச்சர்யம்.   

மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே என முழங்கும் ஒரு அரசியல்கட்சியின் தலைவன் (அமோல் குப்தே அசரடிக்கும் ஒரு நடிகர்). ஒரு கோகெயின் கும்பலுக்கு துணைபோகும் போலீஸ் அதிகாரி, குதிரை பேரங்களை நிர்ணயிக்கும் மூன்று பெங்காலி சகோதரர்கள், மழைக்கால மும்பையின் ராத்திரி நேரங்கள், அதிரவைக்கும் பின்னணி இசை, சோர்வடையச்செய்யாத திரைக்கதை, சிலீரென தென்றலாகவும் பளீரேன மின்னலாகவும் பலே வசனங்கள என எல்லா ஏரியாக்களிலும் விஷால் பரத்வாஜ் பின்னியிருக்கிறார்.

கட்டாயம் திரையரங்குகளில் சென்று பாருங்கள்.

Imtiaz Ali – 2 – Jab we met

இம்தியாஸ் அலி பற்றிய எனது முதல் பதிவின் முதல் வரி, “வாழ்க்கையை ஒரு கோழி இறகைவிட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி..என்று எழுதியிருந்தேன். ஜப் வீ மெட் திரைப்படத்திற்கு அத்தனை அழகையும் கொண்டு வந்து கொட்டி அதனை ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையாக உருவாக்கியிருப்பது காத்ரீனா கைஃ   கரீனா கபூர் அழகுற ஏற்று நிறைவாக நடித்திருக்கும் கீத் என்னும் அந்த கதாபாத்திரம்தான். 

Continue reading

Imtiaz Ali -1

வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன. 

இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு தயாரிப்பில் இருக்கின்றன. வெளிவந்த இரண்டுமே personally  அவருடைய master pieces  என்றுதான் சொல்லுவேன்.

Continue reading

1 அழகி,1 gang & ஸ்ரீராம்ராகவன்

 ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும்  தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.

Continue reading

RACE(2008)

பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.

 

Continue reading

Saawariya (2007)

 தஸ்த்தாவெஸ்கியின்வெண்ணிற இரவுகள்நாவலை தழுவியது

முன்குறிப்பு

சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக நிச்சயம் எடுக்கப்படவில்லை. அது அழகியல் நோக்குடன் திரையை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டும்தான். இதனை மிக தெளிவாக புரிந்துகொண்டே திரையரங்கத்திற்கு சென்றால் பிழைக்கலாம். இல்லையென்றால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.

புதுமுகங்களின் காதல் கதை என்றால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் என்ற எண்ணத்தில்தான் எல்லோருமே சென்றோம். ஆனால் இப்படி ஒரு புதிய வடிவத்தை எதிர்ப்பார்க்காத பெரும்பான்மையானோர் பாதியிலேயெ கிளம்பிவிட்டனர். அரங்கம் நிறைந்த காட்சியாக தொடங்கிய காட்சி, இடைவேளை வரும்போது பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகளை காலியாகவே விட்டுவிட்டு தொடர்ந்தது. Continue reading