ஆன்மீகம் என்பது…

ஆன்மீகம் என்பது ஒரு வகையான ஹானஸ்டி. நமக்கு நாமே உண்மையா இருக்கும்போது அதை உணரமுடியும்.

 

– சஞ்சய் சுப்ரமணியம்

தன்னம்பிக்கை மந்திரம்

உலகத்திலேயே நான்தான் பெஸ்ட் ப்ளேயர். அதை நிச்சயம் நான் நிரூபிப்பேன்னு ஒவ்வொரு முறை விளையாடும்போதும் நினைச்சுப்பேன். என் வெற்றிக்கான தன்னம்பிக்கை மந்திரம் அதுதான்.

 

விஸ்வநாதன் ஆனந்த்.

“தடைக்கல்லும் எனக்கொரு படிக்கல்லப்பா”

ஐந்து ரூபாய் கடன் வாங்கி என் வாழ்க்கையை ஆரம்பித்த நான் இன்று பல கோடிகள் கடன் வாங்கும் அளவிற்கு தகுதி படைத்தவன் ஆகியிருக்கிறேன்.

 

 

ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு உதவும் நதி நீர் எதற்கும் உதவாத உப்பு நீருடன் கலக்கிறது. ஆனால் அதே கடல் நீர் ஆவியாகி எல்லோருக்கும் உதவும் மழையாகப் பொழிகிறது. இந்த அழகான சுழற்சியை வெற்றி, தோல்வி என்கிற வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது. வெற்றி என்ற அரண்மனையில் எதுவும் கிடைக்காது. அடர்ந்து விரிந்த காடுகளில்தான் அனுபவங்கள் குவிந்து கிடக்கின்றன

 

தோல்விகள் குறித்து பிரகாஷ்ராஜ்