ஓவியர் ஜீவாவின் தத்ரூப போஸ்டர்கள்

கொங்கு, நீலகிரி மாவட்டங்களில் 80-90களில் வளர்ந்தவர்கள் அனைவரும் ஓவியர் திரு.ஜீவா அவர்களின் (Jeeva Nanthan) போஸ்டர் வரைபடங்களை பார்க்காமல் இருந்திருக்கமாட்டார்கள். அற்புதமாக – தத்ரூபமாக போஸ்டர்களை, திரை நாயகர்களை வரைவார். சாதாரண பேப்பர் போஸ்டர்களை விடஇவர் ஓவியங்கள் தந்த தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.

எங்கள் (நீலகிரி மாவட்டம்) மஞ்சூர் கோகுல் தியேட்டரில், இரண்டாவது ரிலீஸாகத்தான் படங்கள் வரும். படச்சுருள் பெட்டியோடேயே, முதலில் வெளியாகியிருந்த தியேட்டரில் வைக்கப்பட்ட சினி ஆர்ட்ஸ் கட்டவுட்டுகளும், போஸ்டர் வரைபடங்களும் வரும். படத்திற்கு எப்படி ஆர்வத்தோடு காத்திருப்போமோ, அதுபோலவே, இந்த கட்டவுட்களுக்கும், வரைபடங்களுக்கும் காத்திருப்போம்.

இன்றுவரை அவரின் நிறைய கட்டவுட்டுகள் நினைவில் இருந்தாலும், எனக்கு பிரத்யேகமாக “செந்தூரப்பூவே” விஜயகாந்த் பெரிய போஸ்டரும்,. அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்கு பிசி.ஸ்ரீராம் லைட்டிங் போலவே வரையப்பட்டிருந்த ஒவியமும் இன்று வரை பசுமையாக நினைவில் நிற்பன.

அவரைப்பற்றிய ஒரு ஒரு சுவாரசியமான ஆவணப்படம்.