ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும் தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.
1) Johnny gaddar (2007)
அவரின் ‘ஜானி கதர்’ (jonny gaddar) தான் முதலில் நான் பார்த்தது. 2007 ல் வெளிவந்தது. அந்த வருடத்தின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்டது. தாமதமாக 2008ன் மத்தியில்தான் பார்த்தேன். பிரபல எழுத்தாளர் ஹார்ட்லி சேஸ் பெயருக்கு நன்றி தெரிவித்துவிட்டு திரைப்படத்தை ஆரம்பிப்பவர் திரைப்படம் முடியும் வரையிலும் அதனை மறக்காமல் செயல்படுத்தியும்விட்டுச் சென்றிருக்கிறார்.
விக்ரம், ப்ரகாஷ், ஷார்துல்,ஷிவா,ஷேஷாத்ரி ஆகிய ஐவரும் வெவ்வேறு பின்னணி கொண்ட, குழுவாக இணைந்து செயல்படும் ஒரு திருட்டு கும்பல். (வேண்டாம் இவர்கள் கொஞ்சம் intellectual ஆக செயல்படுவதால்) ஒரு கேங் என்று சொல்வோம். திருட்டென்றால் சில்லரைகள் அல்ல. ஒரு வீட்டை உடைத்து, ஒரு பெரிய bank robbery அல்லது ராபின்ஹூட் தனமாய் கெட்டவனிடமிருந்து நல்லவனுகு money transfer என்ற சித்தாங்களெல்லாம் இல்லை. சற்றே புத்திசாலித்தனமாக யோசிக்கப்ப்ட்ட ஒரு சிறிய முதலீட்டின் பேரில் (ஆளுக்கு 5 லட்சம்) போட்டு ஒரு பெரிய மீனை சுருட்டும் திட்டம் (அதிகமில்லை gentlemen! 5 கோடி மட்டுமே) .
மிகவும் தெளிவாக, பிசிறின்றி தீட்டப்பட்ட திட்டத்தில் வெளியிலிருந்து யாரும் புகுந்து சொதப்பிவிட முடியாத, சற்றும் இடறாத smooth execution க்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருக்கும்போது சற்றும் எதிர்பாரதவிதமாக அவர்களுக்குள்ளேயே முளைக்கும் ஒரு கறுப்பு ஆடுதான் படத்தின் இரண்டாவது ட்விஸ்ட். முதலாவது. அதனை படத்தை ஆரம்பிக்கும்போதே போகிற போக்கில் சொல்லி விட்டுப்போவார்.
அதனைத்தொடர்ந்து climax வரை தொடரும் அதிரடியான ட்விஸ்ட்டுகள்தான் இந்த அற்புதமான திரைக்கதையின் முதல் ஹீரோ. வேகம்,விவேகம் இரண்டும் இணைந்த பலமான திரைக்கதையை எழுதிவைத்துவிட்ட பிறகு நடிகர்களைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று ஸ்ரீராம் ராகவன் நினைத்திருப்பதன் வினை இந்த படத்தின் முன்னணி நாயகனாக இருக்கும் நீல் நிதின் முகேஷ் (இவ்வளவு பெரிய screen name?) சற்றும் பொருந்தாத அல்லது அதிகம் வேலை வாங்கப்பட்ட முகபாவங்களுடன் படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார்.
தர்மேந்திராவின் நிறைய திரைப்படங்களை பார்த்ததில்லை. ஆனால் நான் பார்த்த வரையில் அவர் சற்றே ஒவர் ஆக்டிங் செய்பவர் என்ற எண்ணம் என்னில் உண்டு. (லைப் இன் அ மெட்ரோ உட்பட..) ஆனால் இந்த திரைப்படத்தில் பக்குவப்பட்ட கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வினாயக் பதக்கை யாரேனும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் அவர்களுக்கு நரகம் கிடைக்க வேண்டும் என்ற எனது வேண்டுதலை கடவுள் ஸ்ரீராம் ராகவனுக்கு மட்டும் சற்றே தளர்த்திக்கொள்ளட்டும்.
இவர்களைத்தாண்டி ரிமிசென், தயாஷெட்டி, சாகீர் ஹுசைன், கோவிந்த் நமீடோ ஆகீயோரும் பட்டியலில் உண்டு. அவசியம் தவறவிடக்கூடாத திரைப்படங்களும் ஒன்று.
2) Ek Hasina thi ( ஒரு அழகி இருந்தாள்)
EHT பற்றி நிறையவே experts பேசக்கேட்டிருக்கிறேன். ஆனால் பார்க்கும் வாய்ப்பு வரவில்லை. Zee premiere சானலில் வாரம்தோறும் இதனை போட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள். எனினும் முழுமையாக பார்க்கும் ஆவலில் பெரும்பாலும் அவற்றினை தவறவிட்டிருக்கின்றேன். சென்ற மாதத்தின் ஒரு பின்னிரவில் முழுமையாக பார்த்து முடித்தேன்.
ஒரு சாதாரண பெருநகர மிடில்கிளாஸ் பெண்ணின் மீது சற்றும் எதிர்பாராத வகையில் திணிக்கப்படும் underworld குற்றப்பிண்ணனியை தனது காதலனுக்காக அவள் ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்வதும், காதலே பொய் என்று தெரிந்துவுடன் அவனை உறவாடிக்கொல்வதும் என லேசான கதைதான் என்றாலும் மிகச்சிறந்த execution அதனை எல்லாவற்றிலும் வித்தியாசமான திரைப்படமாகச் செய்துவிட்டிருக்கிறது.
சிறந்த ஒளிப்பதிவு (முரளிதரன்) மற்றும் பின்னணி இசை (துவாரக்) ஆகிய இரண்டும் வலுவான திரைக்கதைக்கு சிறப்பான தூண்கள். சைஃப் அலி கான் மற்றும் ஊர்மிளா ஆகிய இருவருக்குமே சிறப்பான performance வழங்கும் அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியிருக்கின்றனர்.
ஏதேனும் ஒரு நாள் நீங்கள் zee network ன் ஏதேனும் ஒரு சானலை கடந்து செல்லும்போது ஏக் ஹசீனா தீ ஓடிக்கொண்டிருந்தால் அவசியம் பாருங்கள்.
Excellent Article…Will try to see this film as mentioned…Thanks..
thanks balajee.