Blender

”அரசூர் வம்சம்” நாவலின் தொடர்ச்சியாக இரா.முருகன் எழுதும் ‘விஸ்வரூபம்’ தொடராக திண்ணையில் வெளிவருகின்றது. நான்கு அத்தியாயங்களும் மிக நன்றாக இருப்பதுடன் அரசூர் வம்சத்தினை ஒரு இரவுக்குள் மற்றொருமுறை படிக்கவும் தூண்டியது. fabulous style.  இந்த மாதம் வெளிவரும் அவரது இளமைப்பருவ biography போன்றதொரு நாவலை – நெம்பர் 40 ரெட்டைத்தெரு – படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரின் சமீபத்திய பத்திகளும், வலைமனையில் இடும் பதிவுகளும், மர்மயோகிக்கான discussion ல் அவரை கமல் இணைத்திருப்பதும் சுஜாதாவின் அடுத்த சுவடின் சாயல் இரா.முருகனிடம் தென்படுவது தெரிகிறது. i expecting him more. நிற்க,சுஜாதாவின் அடுத்த வாரிசாக சாரு தன்னோடு இன்னொரு nomination ஐயும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

 

 

“ஒரு பெரிய வர்த்தக நிறுவனம் செய்ய வேண்டிய காரியத்தை மாத சம்பளம் வாங்கும் ஒரு இளைஞர் செய்கிறார் என்றால் இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம். “. கலாச்சார ஆர்வம் மிக்க அந்த இளைஞர் என்ன செய்தார் என்பதை இந்த கட்டுரை படித்து தெரிந்து கொள்ளலாம்.  வாழ்க!

 

பங்குசந்தையில் முக்கியமான முதலீடு மனோதிடம்தான் என்பதால் நான் இன்னும் அடக்கியே வாசித்துக்கொண்டிருக்கிறேன். நிற்க. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை – முதலீடுகள் பற்றிய alertness ஆகியவற்றுக்கு அள்ள அள்ளப் பணம்” (1) மிக முக்கியமான புத்தகம் என நான் கருதுகிறேன். மிகவும் காத்திரமான ஒரு தகவல்களஞ்சியத்தை வெகு மெல்லிய துகள்களாக உடைத்து மிக அழகான மொழி நடையில் கொடுத்திருக்கிறார் சோம.வள்ளியப்பன். மிகவும் நன்று. ஒரு வரிக்குதிரை போல நிறைய அடிக்கோடிட்ட வாக்கியங்களோடு இருப்பதைப்பார்த்த என்னுடைய மொராக்கன் அலுவலக தோழர் கேட்டது அது ஏதாவது பாடப்புத்தகமா என்று. ஆமாம் என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன்.

 

மலையாள திரைப்பட உலகில் தொடர்ந்து வெளிவரும் மசாலா trend காண சகிக்கவில்லை. மம்முட்டி மீது பூமழை பொழிவதென்ன. மோகன்லால் பன்ச் டயலாக் பெசுவதென்ன. Horrible. சத்யன் அந்திக்காட் திரைப்படம் கூட வெகுவாக என்னை கவரவில்லை. கதபறயும்போள் மட்டுமே கடந்த ஆறு மாதகாலத்தில் ok என்று சொல்லவைத்தது.  அடுத்த வாரத்தில் துபாயில் வெளியாகும் veruthe oru bharya வுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

 

குருவி, குசேலனுக்கு பிறகு எந்த திரைப்படத்தை பார்த்தாலும் comparatively OK என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொள்கிறேன். அதே அளவுகோலிலேயே சத்யம் நன்றாக இருக்கிறது என்று நான் போட்ட குண்டில் நண்பர்கள் சிலருக்கு பலத்த சேதாரமும் ஏற்பட்டிருக்கிறது. நிற்க.வரும் மாதங்களில் வாரணம் ஆயிரம், சரோஜா,நான்கடவுள் ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  வெங்கட்பிரபு,கெளதம்,பாலா ஏமாற்ற மாட்டார்கள் என்று நம்புவோம்.

 

”ரகசியம் ஒன்று சொன்னான்..” என்கிற மிகவும் ரம்மியமான பாடல் ஒன்று. தினமும் எத்தனை முறை கேட்பேன் என்று எனக்கே தெரியவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக சுப்ரபாதம் அதுதான். வாரணம் ஆயிரம் படப்பாடல் என்று MIO சொன்னது. பிறகு இந்த சுட்டியின் மூலமாக அந்த பாடல் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒரு தனியார் இசைக்குழுவினைச் சேர்ந்தது என்றும் அறிந்து கொண்டேன். எது எப்படி இருப்பினும் அனுஷாப்ரதீப்  you are rocking!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s