திருஷ்டிப்பொட்டுகள்

 ஏமாற்றமளித்த திரைப்படங்களைப்பற்றி எழுதியிருந்தேன். இப்போது திருப்திப் படுத்திய திரைவரிசை.

 

 

வெள்ளித்திரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மூலத்தை சிதைக்காமலும் அதே வேளையில் காட்சிக்கு காட்சி காப்பி அடிக்காமலும் இருந்ததாலேயே அதன் சிறப்பு கூடிற்று. பிரித்விராஜும், பிரகாஷ் ராஜும் மிகவும் லாவகமாக நடித்திருந்தனர். நான் ஏமாற்றமடைந்தது சீனிவாசன் ஒரிஜினலில் வைத்திருந்த சினிமாகாரர்களை அட்டாக் செய்யும் வசனங்கள். இதில் முற்றிலுமாய் தவிர்க்கப்பட்டுவிட்டன. ஆட்டோ பயமோ என்னவோ! சிறிய குறைகள் இருந்தன என்றாலும் அவையெல்லாம் புறம் தள்ளக்கூடியவைதான். well done mr. viji! (P.S. விஜி இதற்கு முன்னால் ‘அள்ளித் தந்த வானம்’  திரைப்படத்தினை வேறு பெயரில் இயககியிருக்கிறார் என்பது கொசுறுச் செய்தி.)

 

_______________________________________________________________________________

 

கண்டிப்பாக கமலிடன் இதனை விட சிறப்பாக கேயாஸ் தியரியை அணுகும் திரைக்கதை இருக்கும் என நான் நம்புகிறேன். (நிச்சயம் அவர் BABEL  பார்த்திருப்பார்). ஆரம்பக்காட்சியில் ஒரு பட்டாம்பூச்சியினை பறக்கவிட்டு ( butterfly effect ன் காரண காட்சி) அதனுடனே சென்று அத்தனை கதாபாத்திரங்களையும் காட்டும் லாவகம் போலவே இன்னும் இன்னும்…இறுகத் தைத்த திரைக்கதை கண்டிப்பாக தசாவதாரத்திற்கு இருந்திருக்க வேண்டும். ஹேராமிற்கு கிடைத்த கசையடிகள் விழுந்துவிடக்கூடாதே என்றெண்ணி கமல் அள்ளித்தெளித்திருக்கும் மசாலா மழையின் மீது எனக்கு எந்தவிதமான விமர்சனமும் இல்லை. ஆயினும் ஒரு commercial சித்திரமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நன்றாகவே வந்திருக்கிறது தசாவதாரம்.

 

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு அம்சங்கள் பற்றிதான் எனக்கு பேச விஷயங்கள் இருக்கின்றன.

 

1.CG

 

எப்போதுமே இந்திய திரைப்படங்களில் பணிபுரியும் கணினி வரைகலை நிபுணர்களுக்கும், இயக்குனர்/தயாரிப்பாளர் தரப்புக்குமிடையே மனதளவில் பெரும் இடைவெளி இருக்கும். creativity யை பிரதானப்படுததும் இவர்களது நோக்கமும் முதல் வரிசை பார்வையாளனின் கைதட்டலை எதிர்நோக்கும் அவர்களின் மனோபாவமும் என்றும் ஒத்துப்போனதே கிடையாது. ஆனால் கமல் அந்த இடைவெளியை ஓரளவேனும் – என் பார்வையில் 76 சதவீதம்- தசாவதாரத்தில் சரி செய்திருக்கிறார். (honestly மீதம் 24 சதவீதமும் முற்றிலும்  சொதப்பல்கள்) ஆரம்பக்காட்சிகளின் 12ம் நூற்றாண்டு சிதம்பரம் கோவிலின் ஹெலி ஷாட்டில் தொடங்கி ஓதுவாரின் முகமருகில் வந்து திரும்பும் எக்கச்சக்க உழைப்பை கொட்டி சிறிதும் பிசிறின்றி எடுக்கப்பட்ட காட்சி அட்டகாசம். சுனாமியிலும் சிற்சில சொதப்பல்கள் வந்துபோயினும் ஒட்டுமொத்த executionum நிச்சயம் பாராட்டத்தக்கது. சிற்றாறு ஒன்றின் வழி இரண்டு படகுகளுக்கிடையே வரதராஜப்பெருமாள் சிலையை வைத்துப்போகும் படகு ஊர்வலம் முழுக்க graphics தான் என்பதை ஆழ்ந்து நோக்கும்போதுதான் உணர முடிந்தது.

 

 2. BGM

 

ஒரே வாக்கியத்தில் ஹிமேஷின் இசையையும், தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையையும் நன்றாக இல்லை என்று ஒதுக்கிவிட்டது விகடன். வேறு யாரும் இதைப்பற்றி பேசவும் இல்லை. personally தேவிஸ்ரீ பிரசாத்தின்( DSP) பின்னணி இசைக்கு கண்டிப்பாக பாராட்டு சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறேன். முதல் அமெரிக்க கார் சேஸிங்கில் அவர் செய்திருக்கும் ட்ரம்சாவர்த்தனம் இறுதி வரையில் நம் காதுகளை விட்டு அகலாமல் இருக்கின்றன. கண்டிப்பாக இவரை பாடல்களுக்கும் மெட்டு போடச் சொல்லியிருக்க வேண்டும். ஹிமேஷை விட மிகச் சிறந்த பாங்க்ராவை வெகுநிச்சயமாக  DSP  போட்டிருக்கவும் கூடும். படம் நெடுகவே பின்னணி இசை பயணப்பட வேண்டும் என்று முடிவு செய்துவிட்ட பிறகும்கூட எங்கேயும் பிசிறடிக்காமல் தன்னிடமிருந்ததில் சிறந்ததை கொடுத்த DSP – you are great!  நிச்சயமாக சில முன்னிலை இயக்குனர்களின் திரைப்ப்டங்கள் DSP க்கு கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

 

 

வைத்தீஸ்வரன் ஒரு superstitious commercial thriller. இயல்பாகவே இந்த கதை நாடிஜோதிடம், மறுஜென்மம் ஆகிய இரண்டு ஆகப்பெரிய நிரூபிக்கப்படாத superstitious கூறுகளைக் கொண்டு எழுப்பப்பட்டுவிட்டதால் லாஜிக் பற்றிய பெரிய கேள்விகளை கேட்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சில அனாவசிய பூசுற்றல்கள் இருந்தாலும் போரடிக்காமல் நன்றாகவே இருக்கிறது. பார்க்கலாம். சரத்குமார் பச்சைக்கிளி முத்துச்சரத்திற்கு பிறகு இதில் நன்றாக நடித்திருக்கிறார். மனோபாலா அசத்தியிருக்கிறார். Good one.

 

 பொம்மரில்லுவை காட்சி மாற்றாமல் காப்பி அடித்ததுதும் பாஸ்கரின் ஹாசினியை தமிழ் பேச வைத்ததும்தான்  ராஜாவின் வேலை என்பதால் சந்தோஷ் சுப்ரமண்யத்தை என்னால் எந்த வரிசையிலும் சேர்க்க முடியவில்லை மற்றும் என்னால் ஜெயம் ரவியை சித்தார்த் ரோலில் ஜீரணிக்க முடியவில்லை.

 

அவ்வளவுதான்

 

P.S. சுப்பிரமணியபுரம் இங்கு ரிலீஸ் ஆகவில்லை. குறுந்தகடு வரவும் நாளாகுமாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s