ஜேம்ஸ் வசந்தன் ஒரு சிறந்த கிதார் இசைக்கலைஞர் என்பதை அறிந்திருந்தேன். நல்ல சங்கீத ஞானமும் கொண்டவர். முதலில் அவர் வெளியிட்ட “வாசனை” என்கிற இசைத்தொகுப்பு (அதிகமான மேற்கத்திய வாசனை வீசியது!) பரவலான வரவேற்பு பெறாமல் போய்விட்டது.
திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதே பழைய வாசனை வீசக்கூடாதே என்ற எண்ணம் இருந்து வந்தது. எண்ணத்திற்கு மாறாக வெளிவந்திருக்கும் அவரது முதல் திரைப்பட இசையமைப்பு குறுவட்டான “சுப்ரமணியபுரம்” சிறந்த பாடல்களை கொண்டிருக்கிறது.
“கண்கள் இரண்டால்” என்று தொடங்கும் “ரீதிகெளள” (அல்லது அதன் சாயலைப் பெரிதும் கொண்டிருக்கிற) பாடல் என்னை பெரிதும் கவர்ந்தது. கவிதாயினி தாமரை யின் நல்ல தமிழ் வரிகளை சிதைக்காமல், பெள்ளிராஜ், தீபாமரியம் பாடியிருக்கிறார்கள். இருவருக்குமே இது முதல் திரைப்பாடலாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். வளர வாழ்த்துக்கள்.
welldone james!