Saawariya (2007)

 தஸ்த்தாவெஸ்கியின்வெண்ணிற இரவுகள்நாவலை தழுவியது

முன்குறிப்பு

சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக நிச்சயம் எடுக்கப்படவில்லை. அது அழகியல் நோக்குடன் திரையை பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டும்தான். இதனை மிக தெளிவாக புரிந்துகொண்டே திரையரங்கத்திற்கு சென்றால் பிழைக்கலாம். இல்லையென்றால் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது.

புதுமுகங்களின் காதல் கதை என்றால் நிச்சயம் ஒரு கமர்ஷியல் என்டர்டெயினர் என்ற எண்ணத்தில்தான் எல்லோருமே சென்றோம். ஆனால் இப்படி ஒரு புதிய வடிவத்தை எதிர்ப்பார்க்காத பெரும்பான்மையானோர் பாதியிலேயெ கிளம்பிவிட்டனர். அரங்கம் நிறைந்த காட்சியாக தொடங்கிய காட்சி, இடைவேளை வரும்போது பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகளை காலியாகவே விட்டுவிட்டு தொடர்ந்தது.  

திரைப்படம்

அது வேறு உலகம். காலவெளியில் பதியப்படாத உலகம். பச்சையும், நீலமும் உலகெங்கும் வியாபித்திருக்கும் அழகிய ஒவியம் போல கடவுளின் அந்த்ரங்க பொக்கிஷம் போல இருக்கும் நகரம். அந்த காலவெளியில் ஆங்கிலம் உண்டு. அலைபேசி இல்லை. கருப்பு வெள்ளை திரைப்படங்கள் உண்டு நதிக்கரையை ஒட்டிய திரையரங்கம் உண்டு (அங்கே படகுகள்தான் இருக்கைகள்). இரவின் பெரும் அமைதியை கிழித்துக்கொண்டு நகரும் புகைவண்டி உண்டு. ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான மணிக்கூண்டின் மீது ஏறிப்பார்க்கும்போது நகரின் அழகிய சித்திரம் மனோவசீகரம் மிக்க காட்சியை பெரும் ஆனந்த மழையெனெ உட்கொள்கிறோம்.

மழைபெய்யும் இரவுகள் மட்டுமே உண்டு அங்கே பகல்களே இல்லையென உணர வைக்கும் அளவுக்கு வெண்ணிற இரவுகள் அவை அனைத்துமே.அங்கே இசுலாமியர்கள் அநேகர் வசிக்கின்றனர்.படகுத்துறை ஓரமாய் பெரும் வியப்பென புத்தர் பெருமானின் வசீகரமான சிலை இருக்கிறது. நகரின் வீதியொன்றில் கஜலக்ஷ்மியின் அம்சமான ஒவியம் தீட்டப்பட்டிருக்கிறது. கிறுத்துவ மூதாட்டி ஒருவள் பல வருடங்களுக்கு முன்பு தேசப்பணிக்கென சென்று திரும்பாத அவளது மகனை எதிர்நோக்கியிருக்கிறாள். அவளது வீட்டினூடே சிலுவைகளும், திரைச்சீலையை மோனாலிசா ஒவியமும் அலங்கரிக்கின்றன. முகமெங்கும் மகிழ்வான ஒப்பனையும், மனமெங்கும் மருண்ட இருளும் வாய்க்க நகரை வலம் வரும் விலைமாதர்களும் உண்டு அங்கே.

*******************SPOILERS AHEAD*******************************

இரவு 1

ஈகைப்பெருநாளை எதிர்நோக்கிய கொண்டாட்டங்கள் நகரம் முழுதும் புதிய வாசனையை படர விட்டுப்போயிருக்கிறது. மழைவர காத்திருக்கும் இரவொன்றில் இசையே உலகனெ வாழ்ந்து வரும், உறவுகளற்ற அந்த கலைஞன்ரன்வீர் ராஜா என்கிற கலைஞன் வருகிறான் அந்நகரினூடே. வசீகரமிக்க அந்த நகரினூடே தன்னை இணைத்துக்கொள்ள விழைகிறான். முதலில் விலை மாதர்களை சந்திக்கும் அவனுக்கு அவர்களின் மனமெங்கும் படர்ந்திருக்கும் இருள் நிறைந்த உலகினை தனது வசீகரமான இசைமொழியினால் வளைத்துபோடுகிறான். துயரங்கள் சுமந்திருந்த அவர்களின் பொழுதினை சிலகணப்பொழுதுகளாவது மகிழ்விக்கும் வித்தை அவனுக்கு வாய்த்திருக்கிறது. தெருவில் வாழும் அவனுக்கு இடம்தர விலைமாது ஒருத்தி இரவில் அவனுக்கு இடம்தர தயாராக பெருந்தன்மையோடு மறுத்து, மகனை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த மூதாட்டியிடம் சென்று அவனது வசீகரமான மொழியினை வீசி, அங்கு தங்க இடம் சம்பாத்திக்கொள்கிறான்.

அதே இரவிலேயே தனது கனவுப்பெண்ணை சந்திக்கிறான். நகரின் ஒரு மூலையில். மழையில்லாத அந்த இரவில், கையில் குடையுடனும், கறுப்பு உடை தரையில் புரள ஒரு வெண்ணிலவென அவளைக்காண்கிறான். நிலவின் களங்கம் போல அவள் கண்ணிலும் அளவிட முடியாத சோகம். நிலவுக்கு ஒப்பனை செய்துவிட்டது போல அவளின் மாயத்தோற்றம். வழித்துணைக்கெனெ அவளுடன் வரும் ராஜா அவளின் துயரங்களின் விலாசங்களைப்பற்றி விசாரிக்கிறான். விடை கிடைக்காத நிலையில், வாழ்க்கை என்பதே ஒரு குத்துச்சண்டை மேடை எனவும், அங்கே எப்போதும் பலம் மிகுந்த பல கரங்கள் கொண்ட துயரத்தினை இரு கரங்கள் கொண்ட மனிதன் எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டுமெனவும் உரைக்கின்றான். கனிவான மொழி அவளை கட்டி இழுக்கிறது.

நேரமின்மையால் அவள் விடைபெற அந்த சந்திப்பின் கடைசி நொடியில் அவளது பெயரை அறிகின்றான்.அவள் சகீனா. அடுத்த நாள் இரவும் சந்திப்பது என்ற உறுதிமொழியுடன் பிரிகிறான். தனது கனவுப்பெண்ணை அறிந்து கொண்ட மகிழ்வு அவனுக்கு. கலைஞனுக்கு காதல் என்பது சர்க்கரைப்பாயசம் மாதிரி. சாதரணமாகவே இசையினை குழைத்துக் குழைத்து இரவினை நனைக்கின்றான். தெருவெங்கும்,சுவரெங்கும்,சிறு கல்லிலும் அவளது பெயரை பதித்துக்கொண்டே இரவில் கரைகிறான்.

இரவு 2

தனது அன்பார்ந்த காதலை அவளிடம் தெரிவிக்கும் நாள் என்று தனது பிரியத்துக்கிரிய இசைக்கலைஞன் வேலையை உதறிவிட்டு வருகின்றான். மீண்டும் அதேபாலம். அதே குடை. அதே சகீனா. அவளை நகரின் மூலையிலிருக்கும் பெரிய மணிக்கூண்டின் மேல் அவளை அழைத்துச்செல்கிறான். ஒரு உயர்ரக ஒவியமென விரிந்திருக்கும் நகரின் தோற்றம் அவளை பெரும் ஆனந்ததிற்கு உள்ளாக்குகிறது. அவளின் ஆனந்த்தைவிட அதிகமாக அவனுக்கும் .ஆனால் எல்லாமே சில நொடிப்பொழுதுகள்தான். அவள் தனது பழைய நினைவுகளை அவனிடம் கரையவிடும்வரை.

சென்ற ஈகைப்பெருநாளின் தனது இல்ல்த்திற்கு வாடகைக்கென வந்து தனது இதயத்தை சொந்த வீடாக்கிக்கொண்ட கனவான் ஒருவன் தன் வாழ்வில் இருப்பதனை அவள் உரைத்துக்கொண்டே போக பெரும் பாரமொன்று தன் இதயத்தினை கவர்தை உணர்கிறான். அவன். தன்னைவிட்டு ராணுவப்பணிக்காக சென்ற வருடம் பிரிந்துபோன அவன் இந்த வருடம் ஈகைப்பெருநாளின் இங்கே வருவதாக சொல்லியிருப்பதாகவும் அதற்கெனவே தான் அவன் தன்னை விட்டுவிட்டுப்போன அந்த பாலத்திற்கருகில் காத்திருப்பதாகவும் உரைக்கிறாள். முழுதும் நொறுங்கிப்போன நிலையில் இருக்கும் அவனை , அவனது காதலை புரிந்துகொள்ளாத நிலையில் அவனிடமே தனது காதலனுக்கென எழுதி வைத்திருக்கும் கடிதத்தினை அவனிடம் சேர்த்துவிடுமாறு உரைத்துவிட்டு செல்கிறாள்.

அடுத்து வந்த இரு இரவுகளும் அவனுக்கு வெண்ணிற இரவுகளாகவே வாய்க்கின்றன. அவன் எவ்விதம் அவளின் காதலனுக்கும், தனக்கும் உள்ள இடைவெளியை சகீனாவிடம் குறைக்கப்போகின்றான் என்பதும் சகீனாவின் காதலன் திரும்பி வந்தானா என்ற கேள்விகளையும் மிக தேர்ந்த அழகியலுடன் காட்சிப்படுத்தலில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்***************END OF SPOILERS***********************

தொழில்நுட்ப அழகு

சாவரியாவை நிச்சயம் நிறைவான திரைப்படமாக கூறிவிடமுடியாதுதான். ஆனால் அழகியல் ரீதியாக தொழில்நுட்ப ரீதியாக ஒரு மிகச்சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. திரையெங்கும் வியாபித்திருக்கும் ரவி,K. சந்திரனின் கேமராதன் முதல் ஹீரோ இந்த திரைப்படத்தில். எங்கெங்கு காணினும் ஒரு கனவு உலகத்திற்கு வந்திருக்கும் உணர்வினை தரவேண்டும் என்று அவர் மெனக்கட்டிருக்கும் உழைப்பு எல்லா fரம்களிலும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நிச்சயமாக விருதுகள் காத்திருக்கிறது அவருக்கு. Hats off!!

அரங்க நிர்மாணிப்பாணர்களைப்பற்றித்தான் முதலில் எழுதியிருக்கவேண்டும். என்றாலும் ரவி தமிழர் என்பதால் அவரின் மீதான பாராட்டுரை முந்திக்கொண்டது. Omang kumar bandula, Vanita Omang Kumar ஆகிய இருவரின் கலை இயக்கம்தான் திரைப்ப்டத்தின் உயிர் நாடியே. இவ்வளவு அழகிய நிர்மாணத்தை நியமித்து திரைப்ப்டத்தின் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் தன்வசம் இழக்கச்செய்த அவர்களின் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

திரைப்பட மொத்தமும் வசனங்களிலும், இசையிலுமே கோர்க்கப்பட்டிருப்பதால் இதற்கென இன்னும் பிரத்தியேகமான இசையை எதிர்பார்க்கத்தூண்டுகிறது. பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசையை இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். சற்றும் தொய்வில்லாத இசை நிச்சயமாய் இந்த அழகியல் திரைப்படத்தினை தூக்கி நிறுத்தியிருக்கும்.

பிரகாஷ் கபாடியாவின் வசனங்கள் இன்னொடு தூண். இன்னொருமுறை வசனங்களுக்காக DVD ல் பார்க்கலாம் என்று இருக்கிறேன். ஒட்டுமொத்தத்தில் சஞ்சய் லீலா பன்சாலிஒரு சோதனை முயற்சியாக எடுத்த திரைப்படம் பெரும்பாலான பார்வையாளர்களை கவரப்போவதில்லை என்றாலும், பொருளாதார ரீதியாக இழப்பையே தரும் என்றாலும், ஒரு அழகிய முயற்சியை முன்மொழிந்ததற்காக அவரை பாராட்டலாம்.

மற்ற விமர்சனங்கள்

Rediff

Musand’s verdict

6 thoughts on “Saawariya (2007)

  1. இப்படத்தை பற்றி வந்திருக்கும் (வெகு )சில பாசிடிவான விமசனங்களில் உங்களுடையதும் ஒன்று.
    கதையை அருமையாக வர்ணித்திருக்கிறீர்கள்.
    கொஞ்சம் கொஞ்சம் இயற்கை படத்தின் கதை போலுள்ளது.
    இதற்கு போட்டியாக வெளிவந்திருக்கும் ஓம் ஷாந்தி ஓம் பார்த்தேன்.சுமார்தான்.இருந்தும் Box Office Hit !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s