அபர்ணா சென்னின் Mr.&Mrs. Iyer ல்தான் ராஹுல்போஸ் மற்றும் கொன்கனாவின் முதல் திரை அறிமுகம் எனக்கு. மிகவும் நிறைவு தந்த அந்த திரைப்படம் மற்றும் அவர்களின் performance ன் காரணமாக தொடர்ந்து அவர்களின் திரைப்படங்களை பார்ப்பதும் வழக்கமாயிற்று.
கொன்கொனா சென் பேசும்போது தென் தமிழகப் பெண்கள் ஆங்கிலம் பேசுவது போலவே இருப்பதாக நான் நண்பர்களிடத்து சொல்வதுண்டு. அவரது நடிப்பின்மீது மட்டுமல்லாது அவரது குரலிலும் எனக்கு பெரும் அபிமானம் உண்டு. 1 அல்லது 2 வருடங்களுக்கு முன்பாக நிகழ்வுற்ற இந்த Koffee with Karan தொடரில் கொன்கனாசென்ஷர்மா, ராஹுல்போஸ் ஆகிய இருவரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று துபாய் பண்பலை ஒன்றில் மறுஒலிபரப்பு செய்யப்பட்டது.
parellel cinema பற்றியும் இந்திய ஹாலிவுட் திரைப்படங்களில் பெருமளவு சீரழிவு நோக்கியே செல்வது குறித்தும் ராஹுல்போஸ் மிகவும் காட்டமாக பேசுவதும், வழக்கம்போலவே கொன்கனா தனது இனிய குரலில் தனது career குறித்து பேசுவதும் சிறப்புற வந்துள்ளது. இந்நிகழ்வின் முக்கியமான பகுதிகளின் ஒலிப்பதிவு தொகுப்பை இங்கே தரமேற்றியிருக்கிறேன்.(பயணத்தின்போது ஒலிப்பதிவு செய்ததனால் சில இடங்களில் கரகரப்பு சற்று அதிகமாவே இருக்கிறது சற்று பொருத்துக்கொள்ளவும்.)
Link is broken. Can you update it?
Updated now. Thanks
நன்றி!