Next

வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் த்ரில்லர்தானே! அடுத்த இரண்டு நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துவிடும்போது என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சக்திவாய்த்திருக்கிறது இந்த கதையில் நாயகனுக்கு. 

NEXT ஒரு குழப்பமான திரில்லர் என்று சொல்வதைத்தவிர வேறு வழியே இல்லை எனக்கு. இந்த கதை நாயகனை எப்படி வடிவமைப்பது என்று கதாசிரியருக்கு குழப்பம், அப்படி வடிவமைத்த கதாபாத்திரத்தை திரையில் எப்படி காட்டுவது என்று இயக்குனருக்கு குழப்பம், இப்படிப்பட்ட கதையை நடிப்பது என்று முடிவு செய்து விட்டாலும் அதனை தயாரிப்பதா வேண்டாமா என்று நிகோலஸ் கேஜுக்கு குழப்பம் – (இரண்டு தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்!) என்று ஒரே குழப்பமயங்களினூடே எடுக்கப்பட்ட படமாதலால் அதனை பார்த்து ஒன்றரை மணி நேரம் கழித்து வெளியில் வரும் பார்வையாளர்களிடமும் அதே குழப்பங்கள் தொடர்கின்றன.

க்ரிஸ் ஜான்ஸன்(Nicolas Cage) லாஸ் வேகாஸ் நகரில் பணிபுரியும் ஒரு மேஜிக் நிபுணன். தனது இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் நடக்கப்போவதை அறிந்து கொள்ளும் திறனின் காரணமான ஒரு சிறந்த மேஜிக் நிபுணனாக ஜொலிக்க முடிந்தாலும் தனது உடற்மொழியினை திறம்பட கையாளாததால் அவனது நிகழ்வுகளுக்கு கூட்டம் குறைவாகவே வருகிறது. தனது திறமையை சூதாட்டங்களில் காண்பிக்கத் தொடங்குகிறான். ஸ்லாட் மெஷின்களிலும் சீட்டாட்ட மேசைகளிலும் பணத்தை குவிக்கிறான். அவனது இந்த போக்கு சூதாட்ட அதிகாரிகளுக்கும் FBI ஏஜெண்ட்டான கேலி பெரிஸுக்கும்(Julianne Moore) சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. கண்காணிக்கப்படுகிறான். தனது ஆக்கபூர்வ நடவடிக்கையாக ஒரு அன்னியனை தாக்கப்போக திருடனாக உருமாற்றம் பெருகிறான். துரத்தப்படுகிறான்.

அவ்வளவுதான். ஒரு நல்ல சினிமாவிற்கு உரிய அத்தனை காரணிகளும் மிகச் சரியாக அந்த காட்சியோடு அற்றுப்போய்விடுகின்றன.அதற்கு பிறகு நமது காதில் சுற்றப்படும் பூக்களுக்கு அல்ல பூந்தோட்டங்களுக்கு அளவே இல்லை.

ருஷ்யாவை சேர்ந்த அணுகுண்டு ஒன்று காணாமற்போய்விட்டதாகவும் அது தீவிரவாத கும்பல் ஒன்றினால் இயக்கப்பட்டு லாஸ்வேகாஸில் குடியிருக்கும் பெரும்பான்மையோரின் உயிரை குறி வைத்திருப்பதாகவும்  FBI க்கு தகவல் வர, அது குண்டை கண்டுபிடித்து அழிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் விட்டுவிட்டு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் நடக்கப்போவதை அறிந்து சொல்லும் க்ரிஸ்ஸின் பின்னாலேயே சுற்றுகிறது!!!

அதேபோலவே இந்த அணுகுண்டை இயக்கக்காத்திருக்கும் ஒரு சிறு தீவிரவாதக்குழுவும் அவர்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு க்ரிஸ் இதனை கண்டுபிடித்துவிடுவானோ என்று பயந்து ஏகப்பட்ட கலாஷ்நிகாவ்களோடும் இன்னபிற அழிவு சாதனங்களுடனும் க்ரிஸ் பின்னாலேயே அவனை கொல்வதற்கு அலைகிறது.


 இது எல்லாம் ஒருபுறம் இருக்க க்ரிஸ் தனது சிந்தனையில் அடிக்கடி வந்துபோகும் பெண்ணாகிய  லிஸ் காப்பரை(Jessica Biel) சந்தித்து, பேசி காதலாகிக் கனிந்து உருகிக்கொண்டு (டே) இருக்கிறார்.

இதற்கு பிறகு ஒரு மொட்டைமாடி fight முடிந்து க்ரிஸ் எல்லாரையும் எல்லாவற்றிடமிருந்தும் காப்பாற்றி சுபம் போடப்போகிறார்கள் என்று நினைக்கும்போது..அடுத்த extreme பூசுற்றல் வருகிறது. இரண்டு இரண்டு நிமிஷங்களாக advance ஆக திங்க் பண்ணி, திங்க் பண்ணி க்ரிஸ் கிளைமாக்ஸ் வரைக்கும் பார்த்துவிட்டு திரும்பவும் முதல்லேர்ந்து சினிமாவை ஆரம்பிக்க செல்கிறார்.

இதனை எடுத்த இயக்குனருக்கும், நிகோலஸ் கேஜுக்கும் வேண்டுமானால் இது intellectual cinema வாக இருக்கலாம். ஆனால் பார்வையாளனை சோதிக்கும் எந்த முயற்சியும் நல்ல சினிமா இல்லை என்பதை கண்டிப்பாக இதன் ரிஸல்ட் சொல்லும்.

Next
Director : Lee Tamahori
Screenplay :  Gary Goldman
Novel : The Golden Man Author : Philip.K.Dick

(U.S. Box Office கலெக்ஷன் முதல் வாரத்தில் $17,993,461)

4 thoughts on “Next

  1. மைனாரிட்டி ரிப்போர்ட் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். மற்ற சிறப்பான படங்கள் என்னென்ன என்று அறியத் தருவீர்கள்தானே 🙂

  2. Paycheck – எனக்குப் பிடித்திருந்தது. விறுவிறுப்பான படம்; நிச்சயம் ஏமாற்றாது.

    Blade Runner – ஹிட்டான படம்; இன்னும் பார்த்ததில்லை.
    Philip K. Dick

    அவரின் அறிபுனை கதைகள் எனக்குப் பிடிக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s