Hundi Phone என்றால் உலகிலேயே மிக அதிக தொலைதொடர்பு கட்டணங்களைக் கொண்ட எடிஸலாட்டின் (etisalat – Telecommunication department of UAE) சேவையை பயன்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அழைப்புகளை பெற்றுக்கொள்ளும் முறை. அல்லது
அரசாங்கத்தினை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறை.
சற்று விளக்கமாக
துபாயிலிருந்து இந்தியாவிற்கு சாதாரண நேரத்தில் அழைக்க கட்டணம் – 2.30 AED.(ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் திர்ஹாம்) ஒரு சராசரி இந்தியர் தனது வீட்டிற்கு வாரம் 30 நிமிடங்கள் உரையாடுவார் என்று வைத்துக்கொண்டால் அவர் etisalat சேவையை உபயோகிக்கும் பட்சத்தில் மாதம் செலவழிக்கும் பணம் => 4 * 30 = 120, 120*2.30= 276 AED (சராசரியாக 3036 இந்திய ரூபாய்கள்)
இந்தியாவிலிருந்து துபாய்க்கு அழைக்க , ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 9 இந்திய ரூபாய்கள். ([Hutch – 8.50,Airtel – 9.50, BSNL – 9 – தவறுகள் இருந்தால் குறிப்பிடவும்]). இதே 30 நிமிட கணக்கு வைத்துக்கொண்டால் 4*30 = 120, 120*10 = 1200 இந்திய ரூபாய்கள். அதாவது வெறும் 109 AED மட்டுமே.
இந்த கணக்கின்படி அவர் சேமிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் திர்ஹாம் – 167 AED அதாவது 1837 INR.
இதனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து விட்ட (திருட்டு) தனிநபர் வருமானம் மிகவும் அதிகம் என்று சொல்லலாம். எனக்கு அலுவல் ரீதியாக தெரிந்த கேரள நண்பர் ஒருவர் தனக்கு வரும் குறைந்த சம்பளத்தை இதன் வாயிலாக பெருக்கிக் கொண்டிருக்கிறார்.
எப்படி?
கேரளாவில் உள்ள தனது கிராமத்தில் ஒரு தொலைபேசி இணைப்பை இதற்கெனவே exclusive ஆக எடுத்திருக்கிறார். (கிராமப்பகுதி ஆதலின் அங்கு மாத வாடகை 100 ரூபாய் அல்லது அதற்கு சற்றே அதிகமானதாக மட்டுமே இருக்கிறது.) துபாயிலிருந்து இந்தியாவிற்கு தொலைபேச விரும்பும் நண்பர்களை தனது வாடிக்கையாளர்களாக்கிக்கொள்கிறார். (புதிதாக திருமணமானவர்கள் / திருமணம் நிச்சயம் ஆகி இன்னும் சில மாதங்களில் திருமணம் ஆகப்போகிறவர்கள் / தனது மனைவி/துணைவி/காதலி மேல் அதிக பிரியம் கொண்ட ஆனால் பொருளாதார சிக்கல்களின் காரணமாக அவர்களை தன்னுடன் அழைத்து வர முடியாதவர்கள் என அவரின் customer database மட்டுமே ஒரு நல்ல சிறுகதை அளவிற்கு சுவாரசியமானது.)
இவ்விதம் பேச விரும்பும் நண்பர்களிடம் இவர் வசூலிக்கும் தொலைபேசி கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 1.20 AED. அதாவது எடிஸலாட் கட்டணத்தில் பாதி. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 13 ரூபாய் 50 காசுகள். ஆக ஒரு நிமிடத்திற்கு இவருக்கு லாபமாக கிடைப்பது 4 ரூபாய் 50 காசுகள். இவரிடம் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 500 நிமிடங்களாவது மாதம் பேசுகிறார்கள். (அவரிடம் இருந்த சிறிய நோட்டுப்புத்தகத்தினை பார்த்தேன். 1000 நிமிடம் பேசும் அன்பர்களும் உண்டு. ) ஆக குறைந்தபட்சம் 10 வாடிக்கையாளர் கிடைத்தாலே இவருக்கு 5000 நிமிடங்களின் வருமானம் கிடைத்துவிடுகிறது.
வருமானம் – 5000 * 4.50 = 22,500 இந்திய ரூபாய்கள் = 2045 AED ( approximately). கிட்டத்தட்ட அவர் வாங்கும் சம்பளம் (ஊக்கத்தொகை, இதரபடிக தவிர்த்து) வருகின்றது. இதன்படி இவர் வாடகை போக எப்படி பார்த்தாலும் 22000 ரூபாயை வரியில்லாத வருமானமாக சேமித்துக்கொள்கிறார். !!!
Interesting!
thanks aparna 🙂
சிவா..அந்த 1000நிமிடம் பேசியவர் யாரு 🙂
நம்ம இது போல ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமா?
அது புதுசா கல்யாணம் நிச்சயமான ஒருத்தரு சரவணன். DAFZA ல வேலை பார்க்கறாரு. பாவம். சம்பளத்துல பாதியை phonekku கொடுக்குறாரு.