என்னைப்பற்றி எட்டு!

அழைத்தமைக்கு நன்றி பிரகாஷ் .

 

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

 

1.12ம் வகுப்பு படிக்கும்போது ரபி பெர்னார்ட் நடத்திய சொல்வீர் வெல்வீர் என்கிற தமிழகம் தழுவிய வினாடி வினா நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களின் போட்டியை தாண்டி, நீலகிரி,பெரியார்,கோவை மாவட்டங்களின் சார்பில் கலந்து கொண்ட 35 பள்ளிகளின் போட்டிகளை தாண்டி மூன்று மாவட்டங்களின் மொத்த பிரதிநிதியாக கலந்து கொண்டது. இறுதி பரிசு கிடைக்காவிடினும், என்னுடைய பொதுஅறிவு திறனுக்கு கிடைத்த முதல் மகுடம் ஆதலால் அதனைக் குறித்த பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு.

 

 

2. பள்ளிக்காலங்கள் முழுதும் தமிழ் பேச்சுப்போட்டியோ, கட்டுரைப்போட்டியோ ஏதேனும் நிகழ்வு ஒன்றிற்கு நன்றி நவில்தலோ அல்லது தமிழ் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் என் பெயர் தயக்கமின்றி பரிசீலிக்கப்படும். பெரிய மேடையோ, சிறிய மேடையோ எல்லா இடங்களிலும் என் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் . இது எனது நீண்ட கால பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது . (இதற்கு காரணமாயிருக்கும் எனது சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், தமிழ் அறிவிற்கும் எனது தந்தையும், அத்தையும் போட்ட அஸ்திவாரங்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.)

 

3. சினிமாவில் graphics தொழில்நுட்பத்தில் சில மாதங்கள் பணிசெய்ய நேர்ந்தது. சேரனின் ஆட்டோகிராப் திரைப்பத்திற்கான பணியின்போதான ஒரு zerohour ல் அந்த திரைப்படத்தின் பாடல் கேசட்டில் ஒலித்துக்கொண்டிருந்த “மீசைவச்சபேராண்டி” என்ற பாடலை சுட்டிக்காட்டி நான் அந்த பாடல் சேரன் படத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறதே என்று சொல்லப்போக, வேறு எந்த சிறப்பம்சங்களுமே இல்லாமல் மன்மதராசா” பாடலுக்காக ஒரு படமே ஓடும்போது எனக்கும் இது போன்ற குத்துப்பாடல்கள் வைப்பதில் தவறு எதுவும்ட்ட் இருப்பதாக தோன்றவில்லை என்று சேரன் அவர்கள் கூற, commercially comramising சேரன் மக்களுக்கு தேவைப்படமாட்டாரே என்று நான் சட்டென சொல்லிவிட்டேன். மிகுந்த கோபத்தோடு அன்று அலுவலத்திலிருந்து சென்றுவிட்டார். அதற்குபிறகு 2 மாதங்கள் வரையில் அவர் பணிகளை மேற்பார்வையிடவே வரவில்லை. மிகப்பெரிய தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணத்துவங்கியிருந்த வேளையில் ஒருநாள் அவரின் உதவியாளர் கிருஷ்ணராஜ் என்பவர் என்னை தேடி வந்தார். மிகுந்த சிரிப்போடு அவர் சொன்ன செய்தி, “அன்று நான் தொடங்கி வைத்த கோபம் விவாதமாக மாறி, மிகுந்த யோசனைகளுக்கு பிறகு அந்த பாடலை திரைப்படத்திலிருந்து நீக்குவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறதுஎன்பதுதான். தயக்கமின்றி எந்த அவையிலும் எனது கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என்றஎன்னுடைய குணத்திற்கு கிடைத்த பரிசாக நான் கருதுவது அந்த நிகழ்வு.

 

4. February 2005 ல் பணி நிமித்தமாக மான்செஸ்டர் பக்கத்திலிருக்கும் பிராட்போர்ட் (Bradford) என்கிற சிறு நகருக்கு (இங்க்லீஷ்காரர்களுக்கு அது கிராமம்தானாம்!!) செல்ல நேர்ந்தபோது முற்றிலும் சைவனான எனக்கு பெரும் சவால்கள் காத்திருந்தன. ஆல்கஹாலும், அசைவமுமின்றி ஒரு அணுவும் அசையாது இந்த கடும் குளிர்காலத்தில் அசையாது (-15 to 2 degree C) என்று அலுவலத்தில் அனைவரும் சொன்னதையும் மீறி, பெரும்பாலும் வெறும் பழங்கள், சமயங்களில் வெறும் snaks, வெஜிடபிள் சாண்ட்விச் (என்றாலும் உள்ளே ஒரு முட்டையை வெட்டி வைத்திருப்பார்கள்!!!!!) என்று கிட்டத்தட்ட 40 நாட்கள் மீண்டும் சைவனாகவே துபாய் திரும்பினேன். எந்த சூழ்நிலையிலும் எனது தனித்தன்மைகளை (individualities) விட்டுக்கொடுத்துவிடாத எனது கொள்கைக்கு கிடைத்த அனுபவம் அது.

 

5. முதன்முதலில் சென்னையில் பணிதேடிக்கொண்டிருக்கும்போது தகுந்த வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையில் ஒட்டிக்கொள்ள நேர்ந்தபோது எனது சீனியர் முதலில் எனக்கு சொல்லிக்கொடுத்தது தொலைபேசுதலில் சிறப்புறல்” (telephone mannerism). அலுவலத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் நபரைப் பொறுத்து எப்படி ஆங்கிலத்தை வளைத்துக்கொள்ள வேண்டும் என்பது. நான் இன்று வரையில் காசில்லாமல் கற்றுக்கொண்ட மிக காஸ்ட்லியான பாடமாக கருதுவது அதனைத்தான். இன்று வரையில் என்னை நேரில் பார்த்து பேசுபவர்களை விட தொலைபேசியில் பேசுபவர்களின் கற்பனைக்கு நான் ஒரு மிகப்பெரிய கனவான் போல தோற்றம் தருவேன்.

 

6. கேட்டலில் சிறப்பு – Listening and Observing others – என்னிடம் பேச வருபவர்களிடமோ அல்லது பிரச்சனைகளை அலச வருபவர்களிடமோ எனது பிரதாபங்களை விடுத்து அவர்களை பேசவிடுகையிலேயே நிறைய ஆறுதல் அவர்களை சென்றடையும் என்பது எனது அசைக்க முடியாது கருத்து. இந்த செய்கையில் வெற்றியை நிறையமுறை அனுபவித்தவன் என்ற முறையில் அது குறித்த பெருமிதமும் எனக்கு நிறைய உண்டு. அதைப்போலவே புது இடங்களிலும் பொது இடங்களிலும் என் வேலைகளையும் தாண்டி மற்றவர்களை observe செய்வதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. அவர்களின் அணுகுமுறைகள் வித்தியாசமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும் பட்சத்தில் தயங்காமல் காப்பி அடிப்பேன்.

 

7. நான் பணியாற்றும் நிறுவனம் சார்ந்த 10 நாடுகளில் பணியாற்றும் கிட்டத்தட்ட அனைத்து பணியாளர்களின் அன்பிற்குரிய பரிச்சியனாக இருப்பது. எந்த நிலை சார்ந்த பணியாளராக இருந்தாலும் எளிமையாக, தயக்கமின்றி என்னை தொடர்பு கொள்ள
முடியும்
என்ற ஒரு மிகச் சிறிய விஷயம்தான் என்னை அவ்விதம் வைத்திருக்கிறது என்பதும் பெருமிதத்திற்குரிய விஷயமே.

 

8. என்னை சார்ந்தவர்களிடத்து நான் கொண்டிருக்கும்,பகிர்ந்து கொள்ளும் என் அளப்பரிய அன்பு.

 

நான் அழைக்கும் எட்டு பேர்

 

1. கோபாலகிருஷ்ணன்

 

2. குசும்பன்

 

3. அபர்ணா

 

4.புத்தகப்பிரியன்

 

5.பிரசன்னா

 

6.வெங்கடாசலம் ராமகிருஷ்ணன்

 

7.ராகவன்

 

8.சித்தார்த்

 

விளையாட்டின் விதிகள்:

 

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

 

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

 

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

8 thoughts on “என்னைப்பற்றி எட்டு!

  1. உங்களுக்கும் நன்றி பிரகாஷ். மிகவும் கடினமான காரியம் நம்மைப்பற்றி பேசுவதுதான் என்பது புரிந்தது.

  2. அழகாக எழுதி இருக்கிறீர்கள். இப்படிப்பட்ட எழுத்துக்களைப் பார்க்கும் போது நான் தமிழில் செய்யும் தவறுகள் என்னைப் பாடாய்ப் படுத்தும்.

  3. வருகைக்கு நன்றி பத்மா அரவிந்த். இப்பொழுதுதான் எழுத்துத்தமிழ் பழகுகிறேன். இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s