இன்னும் விடாத சிவாஜி ஜுரம் பற்றிப்பரவுகிறது துபாய் மீடியாவிலும். இன்றைய 7days செய்தித்தாளின் முதல் பக்கத்தை அலங்கரிக்கிறது ரஜினி நிறைய வீடியோகேம்களின் இடையே சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படம். துபாயிலுள்ள ரஜினி ரசிகர் மன்றம் labourers க்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்கிறது செய்தி.
நேற்றைய emiratestoday ன் இரண்டாவது முக்கிய பக்கத்தில் இடம் பிடித்திருந்தது சிவாஜி தியேட்டர்களில் மூன்று வாரங்களுக்கு டிக்கெட்டுகள் பதிவாகியிருப்பதையும் கூட்டங்கள் அலைமோதுவதையும் ரிப்போர்ட் செய்திருக்கிறது. சுட்டி இங்கே.
“Big money, Big Star” என்ற தலைப்பில் முக்கிய செய்தியாக சிவாஜியின் வசூல் சாதனையை குறிப்பிட்டு நேற்றைய gulfnews செய்தி வெளியிட்டுள்ளது. சுட்டி இங்கே.