சிவாஜி – FAQ

1. படம் நன்றாக இருக்கிறதா?

 

நன்றாக அல்ல…. மிக நன்றாக இருக்கிறது

 

 

2. ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படமா?

 

மிகவும் பிடித்த படமாக இருக்கப்போகிறது. பாட்ஷாவிற்கு பிறகு ரஜினியின் முழு பரிமாணமும் இந்த திரைப்படத்தில்தான் வெளியாகியிருக்கிறது எனது எனது கருத்து. த்னது ஸ்டைலையும் விடாமல் ஷங்கரின் இசைவுக்கு தகுந்தவாறு ஒத்திசைந்து ரஜினிகாந்த் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார். பாட்ஷா போன film of the last decade என்றால் இந்த decade ற்கு சிவாஜி. இன்னும் ஒரு 800 நாள் AVM ராஜேஸ்வரியில் ஒடும் என நம்பலாம். இன்னும் இரண்டு பத்தாண்டுகளுக்கு ரஜினியின் தமிழ் திரைப்பட இறுக்கமான இருப்பை தவிர்க்க முடியாதது என்பதற்கு சிவாஜி ஒரு அற்புதமான அத்தாட்சி.

 

3 .ஷங்கர் படம்தானா?

 

ஆமாம். ஷங்கரின் வழக்கமான சமூக விஞ்ஞானி அவதாரம், பாடல்களில் அழகு + பிரம்மாண்டம், வித்தியாசமான கிளைமேக்ஸ், கிளைமாக்ஸ்க்கு அருகில் வேகமான பாடல் பாடலின் பின்னணியில் நடனமாடும் (ஹீரோயினை விட) மிக அழகான பெண்கள் என எல்லாமுமே இருக்கின்றன. இந்த கூட்டணியில் ரஜினியின் presence ஷங்கரை மிக உற்சாகமாக இயங்க வைத்திருக்கிறது.

 

4. ஷங்கர் + ரஜினி கூட்டணியின் சிறப்பம்சம்..?

 

மீடியா கொடுத்த ஹைப்பையும் மீறி மிக சிறப்புற வடிவமைக்கப்பட்ட output தான் இந்த கூட்டணியின் சிறப்பு என்று நினைக்கிறேன். அதனையும் தாண்டி frame by frame ரசிகர்களை கட்டியிழுக்கப்போகும் அந்த second half. கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரங்கள். excellent. (கமல் + கெளதம் கூட்டணி போல் சொதப்பிவிடுமோ என்று பயந்த உள்ளங்களின் எல்லாம் பால் வார்த்திருக்கிறது சிவாஜி)

 

5. ரஹ்மான்…?

 

Marvellous.. & extraordinary comeback for him in tamil cinemas. முதலிலும் , திரைப்படத்தின் இறுதிக்காட்சியிலும் வரும் சண்டைக்காட்சிகளுக்கு இவர் அமைத்திருக்கும் சிறப்பாக பின்னணி இசை one of the highlight. இன்னொரு முறை தெளிவாக BGM கேட்பதற்காக இரண்டு வாரம் கழித்து செல்லலாம் என்று இருக்கிறேன்.

 

6. சுஜாதா..?

 

இருக்கிறார் எப்போதும் போலவே அமைதியாக ஆனால் அழுத்தமாக. ஆதிசேஷன் பேசும் அத்த்னை வார்த்தைகளுமே தலைவர் தட்டச்சுதான் என்று நினைக்கிறேன்.

 

7. கே.வி.ஆனந்த்?

 

அவர் 2K வில் செய்யும்போதே வாய் பிளக்க வைத்தவர். இப்போது 4K resolution. கேட்கவா வேண்டும். ரஜினியை இவ்வளவு அழகாக, பிரமிப்பாக பார்க்க வைத்ததற்கே அவருக்கு ஒரு பெரிய பொக்கே.

 

8.பிறகு?

 

பீட்டர் ஹெயின், சுமன், விவேக் என்று ஷங்கரின் திட்டங்களுக்கேற்ப தங்களது திறமைகளை வளைத்துக்கொண்ட அதிஅற்புதமான கூட்டணிதான் இத்திரைப்படத்தின் versatility க்கு அடிநாதமாக இருக்கிறது.

 

9. அப்படியென்றால் குறைகளே இல்லாத நிறைவான படமா?

 

குறைகள் இருக்கின்றனin fact இருந்தன. அதெல்லாம் intervel ல் பாப்கார்ன் சாப்பிடும் வரையில்தான் நினைவுக்கு இருந்தன. இரண்டாவது பாதி ஆரம்பித்து, climax ஆரம்பித்து முடியும் தறுவாயில் படம் அவ்வளவுதானா இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும்போது எந்த குறைகளுமே நினைவுக்கு வருவதில்லை.

 

10. என்ன செய்யலாம்?

 

கண்டிப்பாக காத்திருந்து டிக்கெட் எடுத்து நல்ல sound system உள்ள தியேட்டர்களில் திரைப்படம் பாருங்கள். ஒரு மிக நல்ல அனுபவம் காத்திருக்கிறது.

 

 

2 thoughts on “சிவாஜி – FAQ

  1. கண்டிப்பாக ஏமாற மாட்டீங்க அபர்ணா. இது ஒரு பெரிய இசை விருந்தா இருக்கும். சீக்கிரம் பார்க்க வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s