காணவில்லை

1. இயக்குனர் கதிர்:

 

இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களையும், உழவன், காதல் வைரஸ் போன்ற தோல்விப்படங்களை தந்தவரும், சற்றே ஷார்ட் டெம்பர் கொண்டவரும், தனது இன்பாக்ஸில் ARR மெயில்களைத் தவிர வேறு எந்த மின்னஞ்சல்களையும் அண்ட விடாதவரும், கதைப்பற்றும், சதைப்பற்றும் இல்லாமல் டெக்னாலஜியை மட்டுமே நம்பி ஏமாந்து போனவருமாகிய இயக்குனர் கதிரை காணவில்லை.

 

 

2. இசை அமைப்பாளர் பரணி:

 

பார்வை ஒன்றே போதுமே என்ற எவருமே எதிர்பாராத musical hit கொடுத்தவரும், இளையராஜாவிற்கு அடுத்தபடியாக electronics instruments அதிகமாக உபயோகிக்காமல் நிறைய இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பவராக அறியப்பட்டவரும் நல்ல கரிய தாடியும், பெரும்பாலும் குங்குமப்பொட்டுடனும் காணப்படுபவருமாகிய இசை அமைப்பாளர் பரணியை காணவில்லை.

 

3. தயாரிப்பாளர் குஞ்சுமோன்:

 

சூரியன், ஜென்டில்மேன்,காதலன் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவரும் தமிழகத்தில் வீரப்பனுக்கு அடுத்தபடியாக மீசைக்கு famous ஆனவரும், அ.இ.அ.தி.மு.க.வின் கேரள பொறுப்பாளராக இருந்தவரும், ஷங்கர், பவித்ரன் போன்ற பெரிய இயக்குனர்களை ஒருமையில் விளித்து “கருத்து பரிமாற்றம்” செய்து கொள்பவருமாய் இருந்த தயாரிப்பாளார் குஞ்சுமோனை காணவில்லை.

 

4. இயக்குனர் சமுத்திரக்கனி:

 

அண்ணி என்கிற ஜனரஞ்சகமான மற்றும் வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர் இயக்குனர், பாலசந்தரிடம் தொழில் பயின்றவர், உன்னை சரணடைந்தேன் என்கிற என்னுடைய all time favourite திரைப்படத்தை எடுத்தவர், ஒரு விஜயகாந்த திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டவருமாகிய சமுத்திரக்கனியை காணவில்லை. (சமீபத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் இணை இயக்குனர் என்ற தலைப்பிற்கு கீழே இவர் பெயர் காணப்பட்டது – அது இவர்தானா என்பதும் சரியான தகவல் இல்லை)

 

5. இயக்குனர் K.சுபாஷ்

 

சத்ரியன், பவித்ரா போன்ற சில பெயர் சொல்லும் படங்களையும், 123 போன்ற (மராத்தி நாடகத்தை தழுவி இருந்தாலும்) சுவாரசியமான
திரைப்படங்களையும் கடைசியாக ஏழையின் சிரிப்பில், நினைவிருக்கும் வரை வகையறாவில் லேசாக நகைச்சுவை தோய்ந்த மசாலா திரைப்படங்களை எடுத்தவரும், சீர்காழியை சேர்ந்தவரும், மணிரத்னம், சுகாசினி, மனோபாலா உள்ளிட்டோர் குழுவில் முன்னொரு காலத்தில் இணைந்திருந்தவருமாகிய இயக்குனர் K.சுபாஷை காணவில்லை.

 

தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். நன்றி.

3 thoughts on “காணவில்லை

  1. வணக்கம் சிவராம்..
    இது என்னோட முதல் விசிட் இங்கே.

    ஆஹா.. ரொம்ப நல்லாயிருக்கே இது..

    “உன்னைச் சரணடைந்தேன்” உங்களுக்கும் ரொம்பப் பிடிக்குமா சிவராம்!! அருமையான படம் அது!!

    கண்டுபிடிச்சா கண்டிப்பா உங்ககிட்டே சொல்றேனுங்கோ….

  2. பிங்குபாக்: காணவில்லை - 2 « Siva’s Chronicle

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s