The breed திரைப்படம் எனக்கு சொன்ன 10 செய்திகள் :
1. பேய்ப்படம் என்பது மட்டுமல்ல திரை உலகில் நாய்ப்படம் என்னும் பிரிவும் உண்டு .
2. லோ பட்ஜெட் என்பது ஹாலிவுட்டிலும் உண்டு என்றாலும் அதை எப்படி சிறப்புற கையாள வேண்டும் என்று இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும் ( ஆளில்லாத் தீவு – துணை நடிகர்கள் சம்பளம் மிச்சம் ,வில்லன் என்று ஒரு தனிஆளோ அல்லது ஒரு special effects,CG தேவைப்படாத நெடிய பயங்கரமான உருவமோ இல்லாமல் தம்மாத்தூண்டு மிருகங்கள் போதும் என்று முடிவு செய்தது etc)
3. என்னதான் விடுமுறை என்றாலும் தனியாக தீவுக்கெல்லாம் போகக்கூடாது. பேசாம சமர்த்தா வீட்டில் படுத்து தூங்கிட்டா பெட்டர்.
4. வீட்டில் நாய்க்குட்டி எல்லாம் வளர்க்கக்கூடாது. வளர்த்தாலும் அது கடித்து வைக்கும்போது வரக்கூடிய வியாதிகள், அதற்கான மருத்துவக்குறிப்புகள் எல்லாவற்றையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
5. எவ்வளவுதான் பயமாக இருந்தாலும் cinestar ன் DTS ஐயும் மீறி சத்தம் போட்டு தியேட்டரில் இருக்கும் அடுத்தவர்களையும் கலவரப்படுத்தக்கூடாது. (for the kind attention of the english lady who sat besides me!)
6. ராமநாரயணனை விடவும் சிறந்த animals’ directors ஹாலிவுட்டிலும் உண்டு.
7. ஆளில்லாத தீவு வீட்டில் 6 வருடங்களாக பூட்டி வைக்கப்பட்ட கார் கூட ஹாலிவுட் ஹீரோ ஸ்டார்ட் செய்தால் பெட்ரோல் இல்லாமலே பல மைல் ஓடும்.!
8. ஐக்கிய அரபு குடியரசு சென்சார் போர்டு என்பது இந்திய திரைப்படங்களில் வரும் குடிகார வாலாக்களின் அத்தனை சாராய பாட்டில்களின் மீதும் ஒரு கறுப்பு பூச்சியை பறக்க விடுவது மற்றும் ஆங்கில திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் வந்தால் அதற்கு சிகப்பு கம்பளம் விரிப்பது என்ற இரண்டு காரியங்களை சிறப்பாக செய்வது.
9. எல்லாம் சுபம் என்று முடிவடையும் திரைப்படங்கள் மட்டுமல்ல, சந்தித்த பிரச்சனைகள் கூடவேதான் வந்துகொண்டிருக்கின்றன என்று முடியும் திரைப்படங்களின் முடிவுகள் கூட (atleast முடிவு மட்டுமாவது!!!) நன்றாகத்தான் இருக்கின்றன.
10. நீங்கள் மிகப்பெரிய திகில் பட ரசிகராக இருந்தாலும் போஸ்டர் மட்டும் பார்த்துவிட்டு எக்கச்சக்கமாக எதிர்பார்த்துவிட்டுப்போய் விதியை நொந்து கொள்வதோடன்றி திரைப்படங்களைப்பற்றி குற்றமும் சொல்லக்கூடாது.