ஆப்ரஹாம் – ஷார்ஜா கோககோலா நிறுவனத்தில் வேலை செய்கிறார். கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்.
காலையிலிருந்து மாலை வரை ஷார்ஜா முழுவதும் இயங்கும் தானியங்கி குளிர்பானம் வழங்கும் கருவிகளில் குளிர்பானங்களை வழங்குவதும்,அக்கருவிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் சில்லரைக்காசுகளை சேமிப்பதும் இவரது பணி.தான் ஒரு கோக் ஊழியர் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறார்.
குடும்பத்தை விட்டு இருப்பது கடினமாக இருப்பினும், இங்கே இருந்து சம்பாதிப்பதுதான் பெருமை என்றும் எண்ணுகிறார்.இந்த முறை ஊருக்கு செல்லும்போது ஒரு டிஜிடல் கேமரா வாங்க வேண்டும் என்ற ஆவலில் என்னிடமிருந்த கேமராவின் விலை மற்றும் இதர விபரங்களை கேட்டுக்கொண்டிருந்தார். நான் டிஜிடல் கேமராவிற்கு பதிலாக ஹேண்டிகாம் ஒன்று வாங்கினால் இன்னும் மகிழ்வான பதிவுகள் செய்ய ஏதுவாக இருக்கும் என்று கூற மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
இந்த பகுதிகளின் பெரும்பாலும் தானியங்கி குளிர்பான எந்திரங்கள் வேலை செய்வதில்லை என்று கூறியவுடன் மிகவும் பொறுப்பாக அந்த தகவல்களை குறித்துக்கொள்கிறார்
இன்று முழுவதும் வெயில் இவரை வாட்டாமல் இருக்கவும், இந்த முறை ஊருக்கு போகும்போது ஹேண்டிகேம் வாங்கிக்கொண்டு போகவும் எனது பிரார்த்தனைகள்.
Very nice to meet you Mr.Abraham.