சுஜாதாவின் நாவல்களில் சற்றே வித்தியாசமான பின்னணியை உடைய நாவல் என்று இதனை கூறினால் அது மிகையில்லை. மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பேரன் பிறக்குப்போகும் தறுவாயில் உள்ள வயதான ஒருவருக்கு ஏற்படும் இன்னொரு பெண்ணின் மீதான இனக்கவர்ச்சி / காதல் / காமம் / ஆசை ஆகிய இன்னபிற வார்த்தைகளின் கூட்டும், அதனை தன் மனைவி இருக்கும்போது சாதிக்க இயலாது என்பதால் அவளை கொலை செய்யும் முயற்சியும்தான் களம்.
ஆனால் கதையின் இறுதியில் வரும் twist தான் சுஜாதாவின் முத்திரையாகவும், இந்த நாவலை இன்னொரு சிறப்பு மிக்க முயற்சியாகவும் , அதிகம் நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய புதினமாகவும் செய்துவிடுகின்றன.
சாதாரணமாக குடும்பக்கதை போல செல்லும் கதையில் இடையில் toxicology, exotril என சுஜாதாவின் ட்ரேட்மார்க் அறிவியல் / மருத்துவம் சம்பந்தப்பட்ட தகவல்களும் உண்டு. 57 பக்கங்களில் ஒரு அருமையான த்ரில்லர்.
Simply an excellent piece of work.