நான் அவன் இல்லை

na

கொஞ்சமும் நடிப்பு திறமையின்றி, முகவெட்டும் இன்றி, நடனம் ஆடவும் தெரியாத ஒரு நடிகருக்கு தொடர்ந்து எப்படி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அதுவும் அத்திரைப்படங்கள் சுமாரான வெற்றியும் பெறுகின்றன என்ற million dollor questionkku யாரிடமும் விடையில்லை.

 

முதலில் இப்படி ஒரு subject கே.பாலசந்தர் எடுத்திருக்கிறார் என்பதே மிக மிக ஆச்சர்யமான செய்தியாக இருந்தது. நான் அந்த பழைய திரைப்படத்தை பார்க்காததால் எவ்வித்மான treatment கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

 

ஒரு மிகப்பெரிய பெண் தொழிலதிபர், ஒரு கேரளப்பெண், ஒரு மாடலிங் பெண், ஒரு மடத்தின் சன்னியாசம் பெற்ற மற்றொரு பெண் ஆகிய நால்வரும் தங்களை மானபங்கப்படுத்தி, தங்களின் நகை, சொத்துக்களை களாவாடியதாக அண்ணாமலை என்ற வாலிபன் மீது குற்றம் சாட்டுவதாக
தொடங்குகிறது கதை. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் மகளுக்கும் இதே வாலிபனிடம் காதல் கொண்டு தனது பணத்தை இழ்ந்த அனுபவம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தன் மீது சாட்டப்பட்டுள்ளா குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் படத்தின் தலைப்பையே பதிலாக கூறுகிறான். என்ன நடந்த்து என்பதை climax சொல்கிறது.

 

சினேகா, நமீதா,மாளாவிகா,ஜோதிர்மயி,கீர்த்திசாவ்லா என்று casting அமர்க்களப்படுகிறது. அனைவருமே நிறைவாகவே செய்திருக்கின்றனர். இவர்களின் அத்த்னை பேரின் balanced acting ல் ஜீவனின் குறைகளும் ஈடுகட்டப்படுகின்றன. இவர்களின் அத்தனை பேரின் தனி தனி கதைகளில் கீர்த்தி சாவ்லாவின் கிருஷ்ணா episode தான் களைகட்டுகிறது. பக்தி உண்மையிலேயே இந்த அளவுக்கு சீர் கெடவில்லை என்றாலும் சொல்ல வந்த விஷயத்தை மிக அழகாக சொன்னதில் இயக்குனருக்கு வெற்றியே!

 

u.k.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு திரைப்படத்தின் மிக முக்கிய தூண். என்னதான் வேறு வேறு color tone கள் உபயோகித்திருந்தாலும் படத்தின் ஒட்டத்தை குலைக்காமல் காட்சிகளை சிறப்புற செய்திருக்கிறது
அவரின் camera.

 

விஜய் ஆண்டனியின் இசை இன்னொரு நிறைவான சிறப்ப திரைப்படத்திற்கு. மிக சிறந்த “instrumentation techniques”
வைத்திருக்கிறார் மனிதர். சுமாரான பாடலாக இருந்தால் கூட இவரது இசைக்கருவிகளின் கோர்ப்பு அதனை நல்ல பாடலாக மாற்றி விடுகிறது.

 

மொத்ததில் இது மிக சிறந்த படம் என்றேல்லாம் கூறிவிட முடியாதெனினும், நல்ல பொழுதுபோக்குத்திரைப்படம்
என்று கூறுவதில் மிகையில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s