இசை விமர்சனம்
சேரனின் திரைப்படங்களில் பாடல்களில் கவித்துவம் இருப்பதை விட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மிக ஆர்வமாக வலியுறுத்துபவர். புதிய கவிஞர்களையும்ஊக்குவிப்பவர். பா.விஜய் (கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு) சினேகன் (தோழா,தோழா) முதலியோர் சேரன் திரைப்படங்களில் எழுதிய பிறகுதான் தமிழ் திரைப்படங்களின் முக்கியமான கவிஞர்களாக அறியப்பட்டனர்.
இளையராஜாவின் சமீப கால பாடல்களில் சேரனுக்கு இருந்த இணக்கமின்மையைஅவருடன் பணியாற்றிய காலங்களில் அறிந்திருக்கிறேன்.(2004). இப்போது கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு (தேசியகீதம் திரைப்படத்திற்கு) பிறகு இளையராஜாவுடன் இணைந்திருக்கும் தருணத்தில் அவரது இசைகுறித்தான விமர்ச்னங்களை சேரனிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்புகின்றேன்.இசை வெளியாகும் நாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். உண்மையிலேயேசேரனுக்கும், இளையராஜாவிற்கும் மகிழ்வு தரும் வண்ணம் ஒரு சிறப்பான இசைகோர்ப்பாகவே வெளிவந்திருக்கிறது.
1. இளையராஜா அறிமுகம்: (worst) இசைத்தட்டில் அறிமுகமாக இசையமைப்பாளர்கல் பேசுவதெல்ல்லாம் மலையேறிப்போய்விட்ட காலத்தில் எதற்காக இப்படி ஒரு சவசவ பேச்சு என்று தெரியவில்லை.2. காதல் இன்று இப்போது (not bad)இளையராஜா தனது குரலில் இந்த கால காதல் மிகவும் தரம் தாழ்ந்து இருக்கின்றது என்பதனை மிக விரிவாக எடுத்துரைக்கும் பாடல். கண்டிப்பாகா ஏதேனும் ஒரு காட்சிக்கோர்வையில் பின்னணிப்பாடலாக இத்னை சேரன் உபயோகப்படுத்திக்கொள்வார் என்று நம்புவோம். இசையிலும் வரிகளிலும் சிலாகிக்கும்படி எதுவும் இல்லை.3. காசு கையில் இல்லாட்டா (not bad)
முந்தைய பாடலின் மெட்டிலேயே காசின் அருமையை உணர்த்தும் விதமாக அமைந்த பாடல். சர்வ நிச்சய்மாக சேரன் திரைப்படத்தில் மிகவும் மோசமான கட்டத்தை எட்டும்போது வியர்க்க விறுவிறுக்க நடந்து போக இந்த பாடல் backdrop ல் ஒலிக்கும் என நம்பலாம்.இந்த பாடலும் உரைநடை வடிவிலே வழக்கம்போல சிலாகித்து சொல்ல வரிகள் ஏதும் இல்லை. 4. ஏலே எங்க வந்த ..(ok)சினிமா ஆசையில் இருக்கும் கதாநாயகனின் fantasy கனவுகளை வலியுறுத்தும் பாடல் இது. ஒரு சினிமா படப்பிடிப்பின் போது காட்சி அமைப்பதாக இருக்கலாம். மீண்டும் இளையராஜா குரல். பாடலின் வேகத்தின் காரணமாக ரசிக்கப்படும் வாய்ப்பு இருக்கிற்து.5. ஒரு மாயலோகம் (good)
திப்பு, மஞ்சரி குரல்களில் ஒரு fantasy duet. சிறப்பாக வந்திருக்கிறது. இளையாராஜாவின் வழக்கமான தாளக்க்கட்டுடன் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. 6. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி…..(very good)மிக அழகாக வார்க்கப்பட்ட melody. பாடலின் தொடக்கத்தில் வரும் இளையராஜாவின் தந்தனானாவும் அருமை. நேர்த்தியான பின்னணி இசைக்கருவிகளுடன் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் இனிமையான பாடல். கார்த்திக், ஷ்ரேயா கோஷல் குரல்களில். 7. உலகிலே அழகி நீதான்…(song of the album)
இதுதான் இந்த தொகுப்பின் மிக சிறந்த பாடல். விஜய் யேசுதாஸ், மதுமிதா குரல்களில் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரியாய் பொழிகிறது இந்த பாடல். யார் இந்த மதுமிதா. மிக இனிமையான குரலும், அபரிமிதமான உச்சரிப்பும் மிக அருமையாக செய்திருக்கிறார். இனி ராஜா ஷ்ரேயா கோஷலை பயன்படுத்தும் இடங்களில் மதுமிதாவை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எனது கருத்து. மதுமிதா! Hats of to you. நீங்கள்தான் இந்த தொகுப்பை சிறக்க வைத்தவர் என்று கூறினால் அது மிகையல்ல. மேலும் உரைநடைகள் தாண்டி இந்த பாடலில் கவிநடையையும் பயன்படுத்த கவிஞர்களை அனுமதித்திருக்கிறார். excellent song! காதல் மழை காலங்களில் கையில் குடை வேண்டாமடி,நாதஸ்வரம் கேட்போம் நனைந்தே!என்று விஜய் முடிக்க இந்த வரியின் கடைசி வரியை கோர்த்துக்கொண்டு தொடரும் மதுமிதாவின் நிஜத்திலே அழகன் நீதான்,எனக்குத்தான் எனக்குத்தான் என்ற வரிகளை கேட்க,கேட்க ………….its bliss. just hear it.இரண்டு இனிய மெலடிக்களாலேயே இந்த தொகுப்பு நிறைவு பெற்றதாய் சொல்ல முடியாதுதான்எனினும் இது ஒரு நல்ல தொகுப்பு என்பதை மறுப்பதற்கில்லை.Update:
மதுமிதா இந்த திரைப்படத்திற்கு முன்பாக “7G ரெயின்போகாலனி” திரைப்படத்தில் “கனா காணும் காலங்கள்” என்ற இனிய பாடலை பாடியிருக்கிறார். இந்த இணைய பக்கத்தில் கிடைத்த தகவல்.