குரு – 20

குரு

1. கருப்பு வெள்ளையிலிருந்து , இஸ்தான்புல் “blue mosque” ற்கு வண்ணத்தில் மாறும் காட்சி.

 

2. மய்யா,மய்யா பாடலின் இடையில் எதிர்பாராத கணத்தில் ஒடத்துவங்கும் டைட்டில்கள் (cloth printing style)

 

3.மனதை அள்ளும் பர்சோரேபாடல், அருவியில் முன் உள்ள பாறையில் ஐஸ்வர்யா ராயின் நடனம், வேகமாககீழிருந்து மேல் நோக்கி நகரும் கேமரா. hats off – rajeev menon,arr & saroj khan

 

 

4. விடியற்காலை ரயில் நிலையம்அழுத விழிகளுடன் ஐஸ்வர்யாகாற்றும், குழலும் இணைய இருளில் ஒளிரும் அற்புத காட்சி

 

5. அடுத்த காட்சியில் மற்றொரு ரயில் நிலையம்அபிஷேக்கிற்கு பின்னால் தூரத்தில் உதிக்கத்துவங்கும் சூரியன். 6. தன்னை அங்கீகரிக்காத அப்பாவின் மீதான மெல்லிய கோபத்தினை பள்ளி மணியின்மேல் சந்தோஷமாக காட்டும் அபிஷேக்

 

7. கயிற்று ஊஞ்சலில் ஆடும் ஐஸ்வர்யா, மிதிவண்டியில் வரும் அபிஷேக்மெல்ல ஊஞ்சலோடு ஊஞ்சலாக ஆடி அடங்கும் அழகிய கேமரா கோணம்.8.நதியோரக் கோவிலில் விடியலில் நடைபெரும் திருமணம்.

 

9.ஊஞ்சலில் ஆடியபடியே எதிர்காலக்கனவுகளை பட்டியலிடும் அபிஷேக், நிகழ்கால கடமைகளை பட்டியலிடும் ஐஸ்வர்யா, இருவருக்குமிடையேயான அன்பை பிரதிபலிக்கும் அழகு முகபாவங்கள்பின்னால் பரவும்ஹே! ஐரதே ஆஷிகி…” பாடல்

 

 

 

10.பருத்தி சந்தையில் கூட்டத்தை பார்த்த்து மிரளும் மைத்துனனை, சற்றே மெல்லிய சிரிப்பால் ஒதுக்கிவிட்டு முன்னோக்கி நகரும் அபிஷேக்.

 

11.ஒவ்வொரு முறை அபிஷேக்கின் முயற்சிகள் வெற்றி பெருகையில் ஒலிக்கும் குஜராத்தி தீம் பாடல்..(குருபாய்,குருபாய் ஆவோசே…)

 

12. “நாயகனை நினைவுபடுத்தினாலும், பாலியஸ்டர் மூட்டைகளை IAS அதிகாரியின் வீட்டில் கொண்டு போய் வலுக்கட்டாயமாக புகுத்தும் சுவராஸ்யமான காட்சி

 

13.சம்பந்தமே இல்லாமல் இடைசேர்க்கப்பட்ட பாடல் என்றாலும் முழு உற்சாகத்துடன் ஒலிக்கும்ஏக் லோ ஏக் maft பாடல்.

 

14.கம்பீரமான மிதுன், வெள்ளந்தியான ஐஸ்வர்யா இருவருக்குமிடையே நடக்கும் முதல் சந்திப்பும் அந்த intellect வசனமும்

 

15. “ஜல்குக்டிஎன்று செல்லமாக அழைக்கப்படும் அழகிய பெண்ணின் முகத்தை மேலும் வசீகரப்படுத்தும் விதமாக வீற்றிருக்கும் சிறிய வைர மூக்குத்தி போலவித்யாபாலனின் சிறிய அழகிய கதாபாத்திரம் – Gorgeous

 

16. மாதவனின் அழகிய பங்களிப்புஅலைபாயுதே கெட்டப் இன்னும் சிறப்பு

 

17. மாதவன்வித்யாபாலன் இருவரும் பேசிக்கொள்ளும் அந்த மழை காட்சிஇந்த கடல் முழுவதும் உறைபனியாக ஆகிவிட்டால் என்ன என்று வித்யாபாலன் கேட்பது போல மணியின் எல்ல படங்களும் கீதாஞ்சலி, அலைபாயுதே,மெளனராகம் போல ஏன் இருக்கக்கூடாது என்று எண்ண வைக்கிறது.18.அபிஷேக்ஐஸ்வர்யா இடையிலான அந்த செல்ல படுக்கையறை சண்டை.

 

19. கணவனுக்கு தோள் கொடுக்கிற, மென்மையான, பாந்தமான,சற்றே தைரியமான பெண்ணாக மிக அழகிய performance கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா.

 

 

 

20.திரைப்படமெங்கிலும் விரவியிருக்கும் the so called “மதராஸி ஹிந்தி” (வசனம் மணிரத்னம் இல்லையென்றாலும் கூட). சற்றும் தயங்காமல் ஹிந்தி வெர்ஷனுக்கே சென்று பார்க்கலாம். (சூர்யா குரல் மீது அபிமானம் கொண்டவர்கள் தவிர….இன்னும் சொல்ல சொல்ல இனிக்கும் ஆயிரம் இனிய விஷயங்கள் நிறைந்த திரைப்படம் குரு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s