Posted by: sivaramang on: மே 31, 2009
’முரளி கடையில ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம் தம்பி’. கிடைக்க கடினமான ஒரு முக்கியமான டாக்டர் அப்பாயின்மெண்ட்டிற்காக விடியற்காலையில் புறப்பட்ட நேரத்தில் ஆட்டோக்காரனிடம் அப்பா மேற்கண்ட வாக்கியத்தை சொன்னவுடன் சற்றே கோபம் வந்தது முதலில். ஆனால் அந்த நொடியில் நினைத்திருக்கவில்லை ஒவ்வொரு முறையும் அந்த கடையை எவ்வளவு அவசரமாய் கடந்து சென்றாலும் நிதானித்து ஒரு காபி சாப்பிடமால் போவதில்லை என்பதை.
Posted by: sivaramang on: பெப்ரவரி 13, 2009
அனேகமாக கெளதம் மேனன் படமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இயக்குனர், மற்ற எந்த விபரங்களும் இல்லாமல் கடந்த வாரம் முழுவதும் வந்துகொண்டிருந்த pre launch விளம்பரங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கின்றன. யாராக இருந்தாலும் சின்ன சின்ன விபரங்களை கூட அழகாக பார்த்து வடிவமைத்ததற்கு பாராட்டுக்கள். எனினும் சிம்பு நடிக்கிறார் என்றாலே வரும் final outputபற்றிய பயங்களில் இருந்து விடுபட முடியவில்லை.
Posted by: sivaramang on: டிசம்பர் 31, 2008
இம்தியாஸ் அலி பற்றிய எனது முதல் பதிவின் முதல் வரி, “வாழ்க்கையை ஒரு கோழி இறகைவிட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி..” என்று எழுதியிருந்தேன். ‘ஜப் வீ மெட்’ திரைப்படத்திற்கு அத்தனை அழகையும் கொண்டு வந்து கொட்டி அதனை ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையாக உருவாக்கியிருப்பது காத்ரீனா கைஃ கரீனா கபூர் அழகுற ஏற்று நிறைவாக நடித்திருக்கும் கீத் என்னும் அந்த கதாபாத்திரம்தான்.
Posted by: sivaramang on: டிசம்பர் 30, 2008
வாழ்க்கையை ஒரு கோழி இறகினை விட லேசாக எடுத்துக்கொள்ளும் பெண் ஒருத்தி, நொடிக்கு நொடி முடிவினை, மனதினை மாற்றிக்கொண்டேயிருக்கிற உயர்வகுப்புப் பையன் ஒருவன், ஒரு சிறிய அறைக்குள் இருந்துகொண்டு தனது பெரிய குடும்பத்தினை கட்டிக்காக்கிற ஒரு பஞ்சாபித்தாத்தா, தனது மகன் மனது முதிராமல் செய்துவிட்ட தவறுகளை பெரிதும் அலட்டிக்கொள்ளாது மன்னிக்கிற ஒரு தந்தை இப்படி இம்தியாஸ் அலியின் இரண்டு திரைப்படங்கள், அவரின் ஒரு டஜன் கதாபாத்திரங்கள் எல்லாமே எனது மனதுக்கியைந்தன.
இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இரண்டு தயாரிப்பில் இருக்கின்றன. வெளிவந்த இரண்டுமே personally அவருடைய master pieces என்றுதான் சொல்லுவேன்.
Posted by: sivaramang on: டிசம்பர் 27, 2008
ஸ்ரீராம் ராகவனின் இரண்டு நேர்த்தியான த்ரில்லர்கள் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதிலை எளிமையாக்கிவிடும். இந்தியாவின் சிறந்த இயக்குனர்கள் பெயர்கள் கேட்கப்படும்போது மறக்காமல் SR பெயரை எழுதிச் சென்றிடுவேன். இரண்டுமே எந்த காலத்திலும் reference ஆக வைத்துக்கொள்ளக்கூடிய சுவாரசியமான திரைக்கதைகள். பெரிய நடிகர்கள் இல்லாவிடினும், கமர்ஷியல் சாகசங்கள் இல்லாமலும், அந்தந்த நாட்களில் நடப்பு ட்ரெண்ட்களில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்காமலும் தேர்ந்த திரைப்படங்களை வழங்கும் இயக்குனர்களில் ஸ்ரீராம்ராகவனுக்கும் இடம் உண்டு.
Posted by: sivaramang on: அக்டோபர் 30, 2008
‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு சிறுநீர்த்துளியாகவே இதனை எண்ணிக்கொள்வேன்.
Posted by: sivaramang on: செப்டம்பர் 10, 2008
Sunday - வாரத்தின் முதல் நாளன்று மண்ணுலகுக்கு ஒளி அளிக்கும் சூரியனை போற்றும் வகையில்
Moonday – (Monday) - கதிரவனின் வெண்மை ஒளியை பெற்று இரவில் ஒளிரும் நிலவின் பெயரால் வாரத்தின் இரண்டாம் நாள்
(ொடர்ந்து வரும் நான்கு நாட்களும் ஸ்காண்டிநேவியா இதிகாச கடவுள் பெயரால் அழைக்கப்படுகின்றன. )
Tuesday – போர்க்கடவுள் ‘tyr’ பெயரில்
Wednesday - அவர்களின் wodin அரசனின் நினைவாக
Thursday – இடி ‘tor’ பூமிக்கு வரக்கூடாது என வேண்டி அதற்கான கடவுளின் பெயரால்
Friday – wodin-அரசனின் மனைவியை அவர்கள் பெண் தேவதையாய் வழிபட்ட நாள் என்று
Saturday – வாரத்தின் கடைசி நாள் ரோமானியர்களின் இதிகாசப்படி உழவு தெய்வமான ‘Sturn’ நினைவாக
(Courtesy : Chutti vikatan)
Posted by: sivaramang on: செப்டம்பர் 10, 2008
தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதுதொடர்பாக சன் டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு மீது அரசு வக்கீலின் ஆலோசனை பெற்று சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், 153ஏ, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.முதலில் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாதான் செய்திகளுக்கு முழுப் பொறுப்பு என்று பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து ராஜாவுக்கு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பினர். ஆனால் ராஜா வரவில்லை.
இந்த நிலையில் சன் டிவி சார்பில் நேற்றுமத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு கடிதம் தரப்பட்டது. அதில், செய்திகளுக்கு ராஜா பொறுப்பில்லை. நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து முரசொலி செல்வத்திடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy : Thatstami.com
Posted by: sivaramang on: செப்டம்பர் 9, 2008
குன்னக்குடி வைத்திய நாதன் மறைவு செய்தி பெரும் துயர் அளித்தது. இடைவிடாமல் ஒரு நாள் முழுதும் குன்னக்குடி இசை கேட்டுக்கொண்டிருந்த காலங்கள் என் வாழ்வில் உண்டு. முதன் முதலாக கர்நாடக இசை ராகங்கள் கண்டு பிடிக்கும் விளையாட்டை குன்னக்குடியிடமிருந்துதான் தொடங்கியிருந்தேன். அவரும் வலையப்பட்டியும் இணைந்து ஆற்றிய கச்சேரிதான் எனக்கு எப்போதுமே ஆதர்சம். அவரின் ஹம்சகீதே என்ற தொகுப்பில் இருக்கும் ஹீமகிரி தனையே என் வாழ்வின் பெரும் துயர் மிகுந்த தருணம் ஒன்றில் பெரும் துணையாக இருந்து இக்கட்டான ஒரு முடிவெடுக்கும் பாவனையில் இருந்த என்னை பிடித்து இழுத்து வந்து வெளிச்சத்துக்கு நிறுத்தியது.
துயர செய்தி கேட்டவுடன் கோர்வையாக வந்து போன நினைவுகளை எழுதுவது கூட சுமையாயிற்று. அவரின் ஆன்மா சாந்தி அடைய எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.