Siva’s Chronicle

What’s your rashee? (2009)

Posted by: sivaramang on: செப்டம்பர் 27, 2009

ஏதோ ஒரு கத்துக்குட்டி இயக்குனரின் முதல் படம் போல கடுமையாக பல்லை இளிக்கிறது What’s Your Rashee. நீங்களுமா அஷுதோஷ்? மூன்றரை மணி நேரம் முழுதாக பிளேடு போடப்பட்ட முதல் திரைப்படத்தை நேற்றுதான் பார்த்தேன். லேசான லாஜிக் கூட பார்த்துவிடக்கூடாத கதை, மிக மிக மோசமான திரைக்கதை, மோசமான நடிப்பு, and what not?

WYR வழக்கமான அஷுதோஷின் கூட்டணி (மிக முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான்) இல்லாமல் வந்திருக்கும் திரைப்படம். என்ன நினைத்து இதனை உருவாக்கினாரோ தெரியாது. எப்போதும் தனது நீண்ட நெடிய படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பவர் இந்த மூன்றரை மணி நேர திரைப்படத்தின் வாயிலாக அத்தனை பேரின் வயிற்றெரிச்சலையும், தியேட்டரின் பாப்கார்ன் வசூலையும் ஒருங்கே அதிகரித்துச் சென்றிருக்கிறார்.

இளைய மகனுக்கு திருமணம் செய்யும் நாளில் லக்‌ஷ்மி கடாட்சம் பெருகி குடும்ப கடன் தீரும் என்ற குடும்ப ஜோசியரின் அருள்வாக்கை நம்பி அமெரிக்காவின் இருக்கும் இளைய மகனை இந்தியா வருவிக்கிறார் தந்தை. இளைய மகன் இருபதே நாளில் திருமணம் செய்ய எண்ணி ராசிக்கு ஒன்றாக 12 பெண்களைப்பார்க்கிறான். அவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறான். கடன் தீர்ந்த்தா என்பது கதை?

சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கவேண்டிய இதனை எப்போது வீட்டிற்குப்போவோமோ என்று தியேட்டரில் எல்லோரும் எண்ணும் அளவிற்கு மெல்லிய ஜவ்வாக இழுத்திருக்கும் டைரக்டரையும் எடிட்டரையும் கட்டிப்போட்டு நாள் முழுதும் உன்னைப்போல் ஒருவன் பார்க்க வைக்க வேண்டும்.

ஹர்மன் பவேஜாவை சத்தியமாக இந்த திரைப்பட்த்தின் ஹீரோ ஆக்கி இருக்கவே கூடாது. 12 வேடங்களில் நடித்து கின்னஸில் இடம் பிடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஒரளவிற்கு சிறந்த பெர்மான்ஸ் மட்டுமே ஆறுதல். அதுவும் 3-4 கதாபாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. ஒரு மியூசிகலாக சிறந்த பாடல்களாவது இருக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. இப்படி 13 பாடல்களைப்போட்டு தேவதாஸ் ஹரிதாஸ் வரிசையில் தனது படத்தை இணைக்க நினைத்தவர் ARR ஏன் விட்டார் என்றும் தெரியவில்லை.

ஆக தத்தமது ராசிக்கு நேரம் சரியில்லாத அனைவருமே what’s your raashee பார்க்கலாம். அவ்வளவுதான்.

Very very unexpected attempt from ashutosh. Better luck next time sir.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Category

சென்ற மாதங்களில்…

வருகைப்பதிவு

  • 13,212 வருகைகள்

தொடர்பு கொள்ள

siva.sgs@gmail.com

My tweets

  • @ayyanar எனக்கு ரொம்ப பிடிச்ச சந்திரபோஸ் பாட்டு - ஓடையின்னா நல்லோடை ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை @kanapraba 2 months ago
  • @kanapraba <ஜெயச்சித்ரா> கொடுமை பாஸ்! வீட்டில தொடர்ந்து பார்க்கறாங்க :( 2 months ago
  • @nchokkan @kanapraba :) 2 months ago
  • @kanapraba பேசக்கூடாது - அடுத்த வாரிசு :) 2 months ago
  • @gpradeesh< 'kalyan silks'> :) they've opened a branch in karama. that's why 2 months ago

 

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« Aug   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Follow

Get every new post delivered to your Inbox.