Posted by: sivaramang on: ஜூலை 16, 2007
நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல துரோகம் பற்றிய திரைப்படங்களை -அது tragic plot என்பதால் – பெரும்பாலான கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை அல்லது அப்படி ஒரு சம்பவம் அவர்கள் கதையில் நிகழுமென்றாலும் அதனை பற்றிய டீடெய்ல்ஸ் பற்றி பேசாது முடிவுகளை மட்டும் சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள்.